Ponniyin Selvan 1 First Review: பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கு? - வெளியானது முதல் விமர்சனம்!
Ponniyin Selvan 1 First Review in Tamil: ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது
Ponniyin Selvan 1 First Review: ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் விமர்சனத்தை ஓவர்சீஸ் சென்சார் குழுவில் உள்ள உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
#PS1 is Cinematic Historical Saga !! But #Karthi Stole the Show all the way in this Movie !!!
— Umair Sandhu (@UmairSandu) September 28, 2022
அவர் பதிவிட்டு இருக்கும் அந்த விமர்சனத்தில், “ பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வரலாற்று பிரமாண்டம். ஆனால் படத்தை எல்லா வழிகளிலும் வந்தியத்தேவனாக வரும் கார்த்தியும், விக்ரமும் கவர்ந்திருக்கிறார்கள். ஐஸ்வர்யாராய் மீண்டும் மிரட்டி இருக்கிறார். திரையில் அவரது அழகு மின்னுகிறது. மொத்தமாக பார்க்கும் போது, ஒரு அழகனா வரலாற்று படமாக பொன்னியின் செல்வன் வந்திருக்கிறது. படத்தில் சில சுவாரசியமான முடிச்சுகளும், கை தட்டி பார்க்கும் படியான பல காட்சிகளும் உள்ளன.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
First Review #PS1 ! Amazing Cinematic Saga with Terrific Production Designing & VFX ! #ChiyaanVikram & #Karthi Stole the Show all the way. #AishwaryaRaiBachchan is Back & looking Stunning ! Overall, A Decent Historical Saga with some twists & Clap worthy moments.
— Umair Sandhu (@UmairSandu) September 27, 2022
⭐️⭐️⭐️
கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.
View this post on Instagram
அதனைத்தொடர்ந்து 'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது. இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர தமிழ் பிரபலங்களும் கலந்து கொண்டனர். படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது வரை படத்தின் பிரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.