மேலும் அறிய

Pizza 3 Movie: ஒரு வழியா வெளியீட்டுக்குத் தயாரான ‘பீட்சா 3’ படம்... ரிலீஸ் தேதி இதுதான்!

‘பீட்சா’ படத்தின் மூன்றாவது பாகமான ‘த மம்மி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளது படக்குழு.

நீண்ட நாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த பீட்சா படத்தின் 3ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

பீட்சா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘பீட்சா’ திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஹாரர் படத்தின் வித்தியாசமான முயற்சியாக இருந்தது பீட்சா திரைப்படம். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். சி.வி. குமார் இந்தப் படத்தைத் தயாரித்தார்.

பீட்சா 2 - வில்லா

பீட்சா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. தீபன் சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்கிய நிலையில், அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இரண்டாம் பாகம் முதல் பாகத்தைப் போல் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றது இரண்டாம் பாகம்.

பீட்சா 3 - த மம்மி

தற்போது பீட்சா படத்தின் மூன்றாம் பாகமான ‘த மம்மி’ வெளியாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அஸ்வின் பவித்ரா, மாரிமுத்து, காளி வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் ராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் முன்னதாக மே 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. தற்போது வருகின்ற ஜூலை 28ஆம் தேதி ‘பீட்சா 3’ படம் வெளியாகும் என படக்குழு தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

எமோஷனல் ஹாரர் திரைப்படம் ‘பீட்சா 3’

‘பீட்சா 3’ எந்த மாதிரியான படமாக இருக்குமென்கிற ஒரு ஐடியாவை கொடுத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் மோகன் கோவிந்த். ‘பீட்சா’ முதல் பாகத்தில் ஒரு ஹாரர் படமாகத் தொடங்கி, கடைசியில் காமெடி டிராக்குக்கு படம் சென்றுவிடும். அது மாதிரி இல்லாமல் ஒரு முழுமையான எமோஷனல் ஹாரர் திரைப்படமாக பீட்சா 3 இருக்கும். படத்தில் இருக்கும் சில அம்சங்கள் முந்தைய இரண்டு பாகங்களுடன் தொடர்புடையதாக இருக்கும். ஆனால் முற்றிலும் வேறுபட்ட ஒரு கதைக்களத்தைக் கொண்டு உருவாகியிருக்கிறது பீட்சா 3.

பீட்சா ஃப்ரான்சைஸில் வெளியாகும் ஒவ்வொரு படத்துக்கும் மக்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் அண்மைக் காலங்களில் ஹாரர் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து அந்த வகை திரைப்படங்களின் மேல் ரசிகர்களுக்கு ஒரு விதமான சலிப்பு ஏற்பட்டு விட்டிருக்கிறது. இதன் காரணத்தினால் ஹாரர் படத்தில் காமெடியை இணைத்து எடுக்கத்தொடங்கினர் இயக்குநர்கள். இத்தகைய ரசிகர்களை மிரளவைக்கும் வகையில் பீட்சா 3 இருக்குமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
Sam Pitroda:இந்தியர் குறித்து சர்ச்சையான கருத்து: ராஜினாமா செய்த காங்கிரஸ் அயலக தலைவர் சாம் மீண்டும் நியமனம்!
Sam Pitroda:இந்தியர் குறித்து சர்ச்சையான கருத்து: ராஜினாமா செய்த காங்கிரஸ் அயலக தலைவர் சாம் மீண்டும் நியமனம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Embed widget