Pisasu 2 Trailer: நிர்வாண போஸ்டர்.. பேயாக மிரட்டும் ஆண்ட்ரியா.. அதே மிஷ்கின் ஸ்டைல்.. வெளியானது பிசாசு 2 ட்ரெய்லர்..!
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிசாசு 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிசாசு 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
பாலா தயாரிப்பில் வெளியான பிசாசு 1 பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் பிசாசு பாகம் 2 பட வேலைகளில் இறங்கினார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்க, அவருடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
View this post on Instagram
போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிசாசு 2’ படத்தில் தன்னை நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தினார்கள் என நடிகை ஆண்ட்ரியா பேசியது பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் அவர், “ "பிசாசு 2 படத்தில் பேயாக நடித்திருக்கிறேன். விரைவில் படம் வெளியாக உள்ளது. படத்தின் கதையைக் கேட்டபோது 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என இயக்குநர் மிஸ்கின் கூறினார்.
View this post on Instagram
அவர் அதை கூறியபோது அதில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. ஆனால் அவர் என்னை கட்டாயப்படுத்தினார். அதன் பின்னர் கதை தரமாக இருந்ததால் ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு வருத்தமில்லை" என்று கூறினார்.