Pathu Thala Second Single: நினைவிருக்கா... அமீன், சக்திஸ்ரீ கோபாலன் குரலில் பத்து தல செகண்ட் சிங்கிள் வெளியீடு!
இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான ’நினைவிருக்கா’ பாடல் இன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. இதற்கான முன்னோட்ட வீடியோ நேற்று முன் தினம் வெளியானது.
சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் இரண்டாம் பாடலான ’நினைவிருக்கா...’ வெளியாகியுள்ளது.
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வரிசையில் சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியாகும் படம் ‘பத்து தல’. இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படங்களின் வரிசையில் நடிகர் சிம்பு - இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் காம்பினேஷனில் பாடல்கள் மீண்டும் இந்தப் படத்தில் அமைந்து ரசிகர்களின் எதிர்பாப்பை எகிறவைத்துள்ளது.
முன்னதாக ரஹ்மானின் குரலில் ’நம்ம சத்தம்...’ எனும் பாடல் சிம்பு பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியாகி ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான ’நினைவிருக்கா’ பாடல் இன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது
ப்ரியா பவானி சங்கர் - கௌதம் கார்த்திக் இருவருக்குமான இந்தப் பாடலின் முன்னோட்ட வீடியோ நேற்று முன் தினம் வெளியானது. அதில் படத்தின் சூழலை விளக்கி, தனக்கு ஃப்ரெஷ்ஷான குரல் வேண்டும், அமீனை பாட வைக்கலாமா என இயக்குநர் கிருஷ்ணா கேட்கும் வகையிலும் காட்சிகள் வீடியோவில் இடம்பெறிருந்தன. பிரிந்த காதலர்கள் மீண்டும் சேரும் தருணத்துக்காக இந்தப் பாடலுக்கு மெட்டமைக்கும் வகையிலான இந்த வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்றது.
ஏ.ஆர்.ரஹ்மானுடன், பாடலாசிரியர் கபிலன், அமீன் ஆகியோரும் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த வீடியோ எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
@arrameen @ShakthisreeG @KaviKabilan2 @nameis_krishna 🌺💜❤️🩹🎉EPI https://t.co/n2abEZ6VDy
— A.R.Rahman (@arrahman) March 13, 2023
இந்நிலையில், அமீன், சக்திஸ்ரீ கோபாலன் இருவரது குரலில் நினைவிருக்கா பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
2017ஆம் ஆண்டு கன்னடத்தில் பிரபல நடிகர் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்காக பத்து தல உருவாகியுள்ளது. கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், அனு சித்தாரா, டீஜே, கலையரசன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. முன்னதாக இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா வடபழனி, பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கௌதம் கார்த்திக், இயக்குனர் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். வரும் மார்ச் 30ஆம் தேதி பத்து தல படம் ரிலீசாக உள்ளது.
மேலும் படிக்க: Oscar Movies OTT Steaming : ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றிய திரைப்படங்கள்... எந்தெந்த ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்... விரிவான தகவல் இதோ