பேசஞ்சரை விட ஶ்ரீலீலாதான் முக்கியம்...பெங்களூரில் ரீல்ஸ் மோகத்தில் ஆட்டோ ஓட்டுநர் செயலால் விபரீதம்
பெங்களூரில் பயணி அவசரத்தில் ஆபிஸ் செல்லும் நேரத்தில் வண்டியை ஓரம்கட்டி ஆட்டோ ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்துள்ளது பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரீல்ஸ் மோகம் ஆட்டி படைத்து வருகிறது. காலை எழுந்ததும் , அலுவலத்திற்கு செல்லும் போது , பாத்ரூமில் , ஓய்வு நேரத்தில் , தூங்குவதற்கு முன் என சின்ன கேப் கிடைத்தால் நம் கைகள் உடனேஇன்ஸ்டாவில் ரீல்ஸ்கலை ஸ்க்ரோல் செய்யத் துவங்கியிருக்கின்றன. டெலிவரி , பைக் டாக்ஸி , ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சவாரி இல்லாத நேரத்தில் ரீல்ஸ் பார்ப்பது பெரிய டம் பாஸாக இருந்து வருகிறது. ஆனால் தனது ஆட்டோவில் கஸ்டமரை வைத்துக் கொண்டு வண்டியை ஓரங்கட்டி ரீல்ஸ் பார்த்துள்ளார் பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்
ரீல்ஸ் மோகத்தில் ஆட்டோ ஓட்டுநர்
பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் தனது ரெட்டிட் சமூக வலைதள பக்கத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். காலையில் அபிஸ் கிளம்புவதற்கு லேட் ஆகிவிட்டதால் அவர் ஆட்டோ புக் செய்துள்ளார். தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு பத்து நிமிடம் தான் ஆகும் என்பதால் நேரத்திற்கு போய்விடலாம் என ஆட்டோவில் நம்பிக்கையாக ஏறி உட்கார்ந்திருக்கிறார். அப்போது தான் அந்த ஆட்டோ ஓட்டுநர் இன்ஸ்டாகிராம் ஓப்பன் செய்து ரீல்ஸ் பார்த்தபடியே ஒற்றை கையில் ஆட்டோ ஓட்டியதைப் பார்த்து அந்த பயணி பதறியிருக்கிறார்.
அப்போது நடிகை ஶ்ரீலீலாவின் ரீல்ஸை பார்த்ததும் அவர் ஆட்டோவை ஓரங்கட்டி ஶ்ரீலீலாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை பார்க்கத் தொடங்கிவிட்டார். இந்த நிகழ்வை அவர் பகிர்ந்ததும் இதே போல் பலர் தங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள தொடங்கினார்கள்.
பல ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டிக்கொண்டே ரீல்ஸ் பார்த்து வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஓட்டுநர்கள் இடையிலான ரீல்ஸ் மோகம் பெரும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஶ்ரீலீலா நடிப்பில் சமீபத்தில் ஜூனியர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'வைரல் வய்யாரி ' என்கிற பாடல் வைரலாகியுள்ளது. முன்னதாக குண்டூர் காரம் , புஷ்பா 2 ஆகிய படங்களில் ஶ்ரீலீலா சிறப்பு தோற்றத்தில் வந்து நடனமாடி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இதே போன்ற நிறைய வாய்ப்புகள் அவருக்கு வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக ஒழிந்து வந்த மசாலா பாடல்கள் மீண்டும் தற்போது சினிமாவில் தலைதூக்கத் தொடங்கியிருப்பது அவற்றில் முன்னணி நடிகைகள் விரும்பி நடிப்பதும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
Can’t They Keep Their Phones Down While Driving?
byu/krapher13 inbangalore





















