![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Parineeti Chopra Marriage: எம்.பி.யை கரம்பிடிக்கும் பாலிவுட் நடிகை.. களைகட்டிய கல்யாண வீடு..!
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் பரினீதி சோப்ராவும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சட்டாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
![Parineeti Chopra Marriage: எம்.பி.யை கரம்பிடிக்கும் பாலிவுட் நடிகை.. களைகட்டிய கல்யாண வீடு..! Parineeti Chopra-Raghav Chadha wedding First pics of bride and groom Parineeti Chopra Marriage: எம்.பி.யை கரம்பிடிக்கும் பாலிவுட் நடிகை.. களைகட்டிய கல்யாண வீடு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/173ea9708abd983b889e1fd1fad5cff71695209192818102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Parineeti Chopra Marriage: பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத் மி எம்பி ராகவ் சட்டாவின் திருமண சடங்கு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்.பி.யை கரம்பிடித்த பாலிவுட் நடிகை:
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் பரினீதி சோப்ராவும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சட்டாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் லண்டனில் ஒரே கல்லூரியில் படித்ததால் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. தங்களை பற்றிய வதந்திகளுக்கு இருவருமே மவுனம் காட்டி வந்த நிலையில் கடந்த மே மாதம் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தனர்.
அதன்படி மே மாதம் 13ம் தேதி டெல்லியில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பாகவத் மன், முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப. சிதம்பரம், சிவசேனா கட்சி தலைவர் ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிச்சயதார்த்த நிகழ்வில் இருவருக்கும் செப்டம்பர் 23 மற்றும் 24 ம் தேதிகளில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
சடங்குகள் உற்சாகம்:
அதன்படி திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், சம்பிரதாய சடங்குகளை இரு வீட்டாரும் தொடங்கியுள்ளனர். திருமணத்தின் ஒரு நிகழ்வாக மணப்பெண் மற்றும் மணமகன் கடவுளை வழிபடும் நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் சட்டா பிங்க் நிற ஆடையில், இளஞ்சிவப்பு நிற சால்வை போட்டுக் கொண்டு உறவினர்கள் முன்னிலையில்கடவுளை வழிபடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் இருவரும் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டதாகவும், முன்னதாக அமிர்தசரசில் உள்ள தங்க கோவிலுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. பிரினீதி சோப்ரா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை என்பதால் பிரியங்கா சோப்ராவும், அவரது கணவரும் திருமணத்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
View this post on Instagram
இதற்கிடையே திருமணத்தை பரினீதி சோப்ராவுக்கும், ராகவ் சட்டாவிற்கு பாலிவுட் திரை நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருவருக்கும் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற உள்ளதால் ராஜஸ்தான் மற்றும் உதய்பூரில் உள்ள இரண்டு பிரம்மாண்ட நட்சத்திர ஓட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
மேலும் படிக்க: Marimuthu: மாரிமுத்துவுக்கு நிகர் அவர் தான்... குணசேகரன் கதாபாத்திரத்துக்கு நேர்ந்த சோகமான முடிவு!
Sanjay Dutt: விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் இணையும் சஞ்சய்தத்... விடாமுயற்சியில் வில்லனா..?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)