மேலும் அறிய

Marimuthu: மாரிமுத்துவுக்கு நிகர் அவர் தான்... குணசேகரன் கதாபாத்திரத்துக்கு நேர்ந்த சோகமான முடிவு!

குணசேகரன் கதாப்பாத்திரத்துக்கு எண்டு கார்டு போடும் சீரியல் குழு... என்ன காரணம் தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவுக்கு பின், அவர் நடித்த கதாப்பாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. ஒரு சில நடிகர்களுடனும் இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை நடிகர்கள் யாரும் அமையவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில் சீரியல் தரப்பில் இருந்து அதிரடியான முடிவுகளை எடுத்திருக்கின்றனர். இதனால் ஒரு சில ரசிகர்கள் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். ஆம் நேற்றைய எபிசோடில் குணசேகரன் கதாப்பாத்திரத்திற்கு எண்டு கார்டு போடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 

நடிகர் மாரிமுத்து  எதிர் நீச்சல் சீரியலில், குணசேகரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அவரின் உடல்மொழி, டயலாக் டெலிவரி என அனைத்தும்  ரசிகர்கள் ரசிக்கும்படியாக இருந்தது. நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்த ஒரு நடிகரை ரசிகர்கள் கொண்டாடியது அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. காரணம் அவர் வில்லத்தனம் மட்டுமின்றி காமெடி ஜானரிலும் பின்னி பெடல் எடுத்து வந்தார்.

சொல்லப்போனால் சீரியலில் மாரிமுத்து அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் அவரின் கதாப்பாத்திரத்தில் வேறு ஒருவர் நடித்தால் அது ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்று தெரியாது. ஏனென்றால் மாரிமுத்து குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவில்லை, வாழ்ந்திருந்தார். 

மாரிமுத்துவின் மறைவால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வரும் நிலையில், அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பெரும் குழப்பத்தில் சீரியல் குழுவினர் இருந்து வந்தனர். அவர் இல்லாமலேயே இத்தனை நாட்களாக கதையை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு சில நாட்களாக மாரிமுத்து ஏற்கனவே நடித்த காட்சிகளை இப்போது உள்ள எபிசோடுகளுக்கு தகுந்தது போல எடிட் செய்து டயலாக் இல்லாமால் காட்சிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில்  நேற்றைய எபிசோடில் திடீரென்று அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தன்னுடைய சொத்துகளை தன்னுடைய தம்பி, அம்மா பெயருக்கு எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்று விட்டார். அவர் வீட்டை விட்டு வெளியே போய் சில தினங்களுக்கு பிறகு மீண்டும் குணசேகரன் ஆக புதிய ஒரு நடிகர் வருவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. 

நேற்றைய எபிசோடில் வந்த மேலும் சில காட்சிகள் குணசேகரன் கதாப்பாத்திரத்தை சீரியல் டீம் முடிவுக்கு கொண்டு வர உள்ளதை காட்டுகின்றது. குணசேகரனின் ரேகைக்கு, ஓலை சுவடிகளை விசாலாட்சி பார்க்கும் போது அவருக்கு ஆதி குணசேகரன் இரண்டாவது மகன் என்று ஜோதிடர் கூறுகிறார். இதனால் இனி வரும் புது நடிகர் குணசேகரனுக்கு அண்ணனாக வந்து கதையை தொடர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நடிகர் மாரிமுத்துவுக்கு இணையாக யாரும் குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாது எனக் கணித்துள்ள சீரியல் குழு,  புதிதாகா குணசேகரன் அண்ணன் கதாப்பாத்திரத்தை கொண்டு வந்து  கதைக்களத்தில் சற்று மாற்றங்கள் செய்து சீரியலை ஒளிபரப்பு செய்வார்கள் என தெரிகிறது.

குணசேகரனின் அண்ணன் கதாப்பாத்திரம் எப்படியானதாக இருக்கும். அவர் தனது நடிப்பு திறமை மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை எல்லாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  ஏற்கனவே கதை ஜீவானந்தம், சொத்து பிரச்சனை, பட்டம்மாள் 40 சதவீதம் ஷேர் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. புதிதாக வரும் குணசேகரணின் அண்ணன் கேரக்டர் எந்த மாதிரியான கதைக்களத்துடன் தொடரப் போகிறது என்பது அடுத்த வாரத்தில் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget