பாபநாசம் நடிகை ஆஷாசரத் மகளுக்கு திருமணம்.... கோலாகலமாக நடைபெற்ற விழா... திரையுலகினர் வாழ்த்து
பாபநாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஆஷாசரத் மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. மணமக்களுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
பாபநாசம் படத்தில் நடித்தவரும் பிரபல மலையாள நடிகை ஆஷாசரத்தின் மகள் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆஷாவின் மகள்
பாபநாசம் படத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றவர் ஆஷாசரத். இவரது மகள் உத்தாரா. சமூக வலைதளங்களில் தன் மகள் உத்தாராவுடன் இணைந்து நடனமாடும் புகைப்படங்களையும் பகிர்ந்து தொடர்ந்து லைம்லைட்டிலேயே இருந்து வருகிறார் ஆஷாசரத். சென்ற 2021ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்றவரான உத்தாரா, மலையாள சினிமாவில் கடந்தாண்டு கெத்தா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இந்நிலையில், உத்தாராவுக்கும் ஆதித்யா மேனன் எனும் சார்ட்டட் அக்கவுண்டண்ட் பணிபுரிவருக்கும் நேற்று (மார்ச்.18) கொச்சியில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. நடிகை காவ்யா மாதவன், நடிகர் லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துகொண்ட நிலையில், இந்தத் தம்பதிக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மிரட்டலான போலீஸ்
பாபநாசம் படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக அதிரடியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை ஆஷா சரத். மலையாள நடிகையான ஆஷாசரத் முதலில் தன் நடிப்புப் பயணத்தை தொலைக்காட்சியிலிருந்தே தொடங்கினார். தேர்ந்த பர நாட்டியக் கலைஞரான ஆஷா சரத் 2012ஆம் ஆண்டு ‘ஃப்ரைடே’ எனும் மலையாளப் படத்தின் மூலம் 2012ஆம் வெள்ளித்திரையில் கால் பதித்தார்.
தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்த போதும் மோகன்லால் உடன் இவர் இணைந்து நடித்த த்ரிஷ்யம் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. த்ரிஷ்யம் படத்தில் வலுவான போலீஸ் அதிகாரி, மகனை இழந்த தாய் என அதிரடி செய்திருந்த ஆஷாசரத் படம் பார்ப்பவர்களை மோகன்லாலுக்கு இணையாக ஆக்கிரமித்தார்.
கமலுடன் அறிமுகம்
தொடர்ந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் இந்தப் படம் ரீமேக் செய்யப்ப்பட்ட நிலையில், அவருடன் அதே கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமாகி கோலிவுட் ரசிகர்களையும் ஈர்த்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வரும் ஆஷா சரத், கமலுடன் மீண்டும் தூங்காவனம் உள்ளிட்ட படங்களிலும் முன்னதாக நடித்திருந்தார்.
நடிப்பு ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் நடன நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு நடுவராக ஆஷா கலக்கி வருகிறார்.
இந்தத் திருமண வீடியோவை ஆஷா சரத் தன் யூட்யூப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், புதுமணத் தம்பதிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இறுதியாக ஆஷா சரத் அன்பறிவு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: PS 2 First Single: “குந்தவையும் வந்தியத்தேவனும்” .. வெளியானது “பொன்னியின் செல்வன்-2” படத்தின் அப்டேட்.. என்னன்னு தெரியுமா?