பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தங்க மயிலுக்கு திருமணமாகி விட்டதா? இன்ஸ்டாவை கலக்கும் புகைப்படங்கள்
Pandiyan Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் நடித்து வரும் நடிகை சரண்யா துராடி தனது திருமண புகைப்படங்களை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் தங்கமயில் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சரண்யா துரடி தனது திருமண புகைப்படங்களை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 :
பிரபல டிவி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பையும் வெற்றியையும் தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.
இதன் பாகம் 2 முதல் பாகத்தை போன்று இருக்குமா என்று கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் இந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: Ajith Kumar: "இனி நாங்கதான்" கார் பந்தயம், பட ரிலீஸ், பத்மபூஷண்! உச்சகட்ட சந்தோஷத்தில் அஜித் ரசிகர்கள்!
தங்கமயில் கதாப்பாத்திரம்:
இந்த சீரியலில் நீங்ல நல்லவரா இல்ல கெட்டவரா என்று ரசிகர்களுக்கு யூகிக்க முடியாத அளவுக்கு உள்ள கதாப்பாத்திரம் தான் தங்கமயில். அவரின் இயற்பெயர் சரண்யா துராடி செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கிய இவர் பின்னர் சின்னத்திரையில் அறிமுகமானர்.
நெஞ்சம் மறப்பதில்லை என்கிற சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சரண்யா. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த சீரியல்கள் சிறிது காலத்திலேயே முடிக்கப்பட்டது, இதனால் அவர் ஒரு சில வருடங்களாகவே எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.
அதற்கு பிறகு இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மூலம் கம்பேக் கொடுத்து ரசிகர்களின் மத்தியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். சரண்யா இது மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இருப்பவர். அவர் செய்யும் ரிலீஸ்களும் இன்ஸ்டாகிராமில் படுவைரலாகும்.
இதையும் படிங்க: விஜய் டிவி 'குக் வித் கோமாளி' பிரபலத்திற்கு கிடைத்த பத்ம ஸ்ரீ விருது!
சரண்யா திருமணம்:
பல இளைஞர்களின் க்ரஷாக இருக்கும் சரண்யாவுக்கு திருமணம் முடிந்தது என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் தனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதாக அறிவித்து ஷாக் கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று தனது நான்காவது திருமண நாளை கொண்டாடிய அவர் தனது கணவரோடு எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். அதுவும் அவரது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முதல்முறையாக வெளியாகி இருக்கிறது.
View this post on Instagram
திருமணமாகி நான்கு ஆண்டுகள் கடந்தாலும் அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பொது வெளியில் பகிர்ந்து கொள்ளவில்லை. தற்போது அவர் தனது கணவர் ராகுலுடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்துள்ளார்.
சரண்யாவிற்கும் அவரது கணவர் ராகுல் சுதர்சனுக்கும் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை தங்கள் வாழ்த்துமழையை பொழிந்து வருகிறார்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

