Pakistan Actress Ushna: இந்திய மணப்பெண் உடையில் பாகிஸ்தான் நடிகை திருமணம்... விமர்சனங்களுக்கு அதிரடி பதில்!
”பாகிஸ்தானிய நடிகை ஏன் இந்திய உடையை அணிய வேண்டும்? இது நம் கலாச்சாரம் அல்ல” என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை உஷ்னா ஷா. 2016ஆம் ஆண்டு முதல் உருது மொழி சினிமாவில் நடித்து வரும் உஷ்னா, முன்னதாக அந்நாட்டைச் சேர்ந்த ஹம்சா ஆமின் எனும் கோல்ஃப் விளையாட்டு வீரரைத் திருமணம் செய்து கொண்டார்.
அத்துடன் முன்னதாக மணப்பெண் அலங்காரத்தில் தன் கணவருடன் காதல் ததும்ப திருமணத்தில் வளைய வரும் வீடியோ, புகைப்படங்களை உஷ்னா தன் இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.
குறிப்பாக வீடியோவில் இந்திய மணப்பெண்கள் போல் சிவப்பு நிற லெஹங்கா அணிந்து ஆடிப்பாடி மணப்பெண் உஷ்னா மகிழ்ந்த நிலையில், தற்போது உஷ்னாவின் உடை ஒரு தரப்பு சமூக வலைதள பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
தனது திருமண உடையில் பெரிதும் கவனம் செலுத்திய உஷ்னா பாகிஸ்தானின் பிரபல ஆடை வடிவமைப்பாளரான வார்தா சலீம் என்பவர் வடிவமைத்த சிவப்பு நிற லெஹங்காவை அணிந்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானிய நடிகையான உஷ்னா இந்திய மணப்பெண் போன்று உடை அணிந்திருந்ததாகக் கூறி அந்நாட்டைச் சேர்ந்து ஒரு தரப்பு நெட்டிசன்கள் உஷ்னாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இந்தியக் கலாச்சாரத்தை பாகிஸ்தானிய நடிகை உஷ்னா ஊக்குவிப்பதாகவும், இது போன்ற விஷயங்கள் பாகிஸ்தானின் கலாச்சார விழுமியங்கள், மத நம்பிக்கைகளை பாழாக்கும்” என்றும், ”பாகிஸ்தானிய நடிகை ஏன் இந்திய உடையை அணிய வேண்டும்? இது நம் கலாச்சாரம் அல்ல” என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில் தனது ஆடையைக் குறிவைத்து வந்த கமெண்டுகளுக்கு தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிலளித்துள்ள நடிகை உஷ்னா, என்னுடைய ஆடையில் பிரச்னை கண்டுபிடிப்பவர்களுக்கு...நீங்கள் யாரும் என் திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை; என்னுடைய ஆடைக்கு நீங்கள் பணம் கொடுக்கவில்லை.
என் நகை,என் உடை அனைத்தும் பாகிஸ்தானில் வடிவமைக்கப்பட்டவை. ஆனால் என் மனம் பாதி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது. அல்லா நம் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். நான் அழைக்கமாலேயே என் புகைப்படக்காரர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பஞ்சாப்பில் பிறந்தவரான உஷ்னாவின் தாய் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Manu James Passes Away : அதிர்ச்சி.. விரைவில் வெளியாக இருந்த முதல் கனவு திரைப்படம்... படம் வெளியாகும் முன்பே மறைந்த அறிமுக இயக்குநர்!