மேலும் அறிய

Pa. Ranjith : தீண்டாமையால் தீ மிதிக்க விடல... நானே ஒரு வாழ்க்கையை உருவாக்கினேன்... பா. ரஞ்சித் பகிர்ந்த அனுபவம்

Pa. Ranjith : ஒவ்வொரு இடத்திலும் சாதி அப்பிக் கிடக்கிறது. ஒரு பொதுவில் இருக்கும் நிலம், மரம் முதல் கடவுள் வரை உனக்கு கிடையாது என சொல்லும் போது அதை எதிர்த்து நான் ஒரு வாழ்க்கையை உருவாக்கினேன்.

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் “வானம் கலைத்திருவிழா” என்ற பெயரில் நிகழ்ச்சியாக கொண்டாடி வருகிறது. கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாதியை அடையாளமாக காட்டி சிறு வயதில் தீண்டாமை என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட அனுபவம் குறித்து பா. ரஞ்சித் பகிர்ந்து இருந்தார். 

என்னுடைய சொந்த ஊரில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். நாங்கள் அந்த ஊரில் 50 குடும்பங்கள் இருக்கும் ஒரு சிறிய காலனியை சேர்ந்தவர்கள். மேலும் நாங்கள் தலித் என்பதால் அந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள எங்களுக்கு அனுமதி கிடையாது. மோளம் அடிக்கலாம் ஆனால் கோயில் உள்ளே செல்ல முடியாது. ஒரு கயிறு கட்டி வைத்து இருப்பார்கள். மிகவும் கோலாகலமாக தீ மிதி எல்லாம் நடக்கும்.  அந்த இடத்தில் இருந்து தான் பார்க்க வேண்டுமே தவிர எந்த ஒரு கொண்டாட்டத்திலோ அல்லது பூஜையிலோ கலந்துகொள்ள முடியாது. இந்த தீண்டாமை எனக்கு பிடிக்காததால் நான் பொதுவாக அந்த திருவிழாவில் கலந்து கொள்ள மாட்டேன். 

Pa. Ranjith : தீண்டாமையால் தீ மிதிக்க விடல... நானே ஒரு வாழ்க்கையை உருவாக்கினேன்... பா. ரஞ்சித் பகிர்ந்த அனுபவம்

ஆனால் நான் ஒன்பதாவது படிக்கும் போது எனக்கும் தீ மிதிக்க வேண்டும் என ஆசை வந்தது. அதனால் எனக்கு மிகவும் பிடித்த கங்கை அம்மன் கோயிலில் காப்பு கட்டி தீ மிதிக்கலாம் என நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து முடிவு எடுத்து நாங்களே ஒரு மஞ்சள் கயிறை கட்டிக்கொண்டோம். இது தெரிந்து எங்கள் காலனியை சேர்ந்த சில பசங்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள். முதல் நாள் 10 பேர் சேர்ந்தவுடன் வீடு வீடாக போய் அரிசி எல்லாம் வாங்கி வருவோம். இதை பார்த்த அந்த காலனியில் இருந்தவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள பசங்களை எல்லாம் காப்பு கட்டி கொள்ள சொன்னார்கள். சில பெரியவர்கள் கூட வந்து காப்பு கட்டி கொண்டார்கள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த குரூப் பெரிதாகிறது. 

நாங்கள் விளையாட்டாக செய்தது ஒரு சடங்காக மாறியது. பொது இடம் என்பதற்காக ஒரு மரத்தை கூட வெட்ட விடமாட்டர்கள். ஆனால் அந்த சடங்கு சமயத்தில் தீ மிதிக்காக எல்லா மரத்தையும் வெட்டினோம் ஆனால் யாருமே எதுவுமே சொல்லவில்லை. மூன்று நாட்களும் வீட்டுக்கு போகக்கூடாது என சொல்லி எங்களுக்கு சாப்பாடு எல்லாம் சமைத்து எடுத்து வந்து கொடுத்தார்கள். மிகவும் சந்தோஷமான ஒரு கொண்டாட்டமாக இருந்தது. தீமிதி அன்று காலனி மக்கள் அனைவரும் கோயிலை சுத்தம் செய்து தீ மிதிக்காக கட்டைகள் எல்லாம் எரிக்கிறார்கள்.

என்னுடைய அம்மா எனக்கு வீட்டில் இருக்கும் நகையை எல்லாம் எடுத்துவந்து அலங்காரம் செய்து விடுகிறார். அனைவரின் கோஷம், அந்த மோளம் அடிக்கும் சத்தம் என அந்த வைப்ரேஷன் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. அனைவரும் ஒரு முறை தான் தீ மிதித்தார்கள். ஆனால் நான் அந்த சந்தோஷத்தில் மூன்று முறை சுத்தி சுத்தி வந்து தீ மிதித்தேன். 

இது தான் ஒரு தலித் வாழ்க்கை. ஊர்ல தீ மிதிக்க ஒரு கதை இருக்கு. அதே போல காலனியில் தீ மிதித்ததுக்கு ஒரு கதை இருக்கு. ஊர்ல என்னை மிதிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் காலனியில் நான் ஒரு கதையை உருவாக்கி நானாக ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தியில் நானாக தீ மிதிக்கும் போது ஒரு தலித் லைஃப்பில் ஒரு கதையை உங்களால் பார்க்க முடிகிறது. 

ஒவ்வொரு இடத்திலும் சாதி அப்பி கிடக்கிறது. ஒரு பொதுவில் இருக்கும் நிலம், மரம் முதல் கடவுள் வரை உனக்கு கிடையாது என சொல்லும் போது அதை எதிர்த்து நான் ஒரு வாழ்க்கையை உருவாக்கினேன். 

தலைப்பு செய்திகள்

கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!
Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..ஃபீல் குட் முதல் டார்க் காமெடி வரை எல்லாம் இருக்கு
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..ஃபீல் குட் முதல் டார்க் காமெடி வரை எல்லாம் இருக்கு

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Embed widget