Diwali 2023 TV Movies: களைகட்ட போகும் தீபாவளி.. டிவியை தெறிக்க விடப்போகும் புதிய படங்கள்.. முழு விபரம் இதோ..!
Diwali 2023 Movies in TV Channels: தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனிடையே சின்னத்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Diwali TV Movies 2023: தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள படங்கள் பற்றிய விவரங்களை காணலாம்.
களைகட்டும் தீபாவளி பண்டிகை
என்னதான் சினிமா படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கென்று இருக்கும் ரசிகர்கள் தனித்துவமானது. இதனாலேயே தொலைக்காட்சி சேனல்கள் நிறுவனங்கள் சீரியல், ரியாலிட்டி ஷோ, பழைய மற்றும் புதுப்படங்கள் என பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் பண்டிகை நாட்களில் ஒவ்வொரு சேனலும் என்ன மாதிரியான நிகழ்ச்சிகள், புதுப்படங்கள் ஒளிபரப்பு செய்யவுள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்படுகிறது.
அந்த வகையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் சென்று கொண்டிருக்கிறது. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்படியான நிலையில் சின்னத்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சன் டிவி
சன் டிவியில் தீபாவளி பண்டிகையன்று மாலை 6 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “ஜெயிலர்” படம் ஒளிபரப்பாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மிர்னா மேனன், வசந்த் ரவி, யோகிபாபு என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இப்படம் ரூ.600 கோடி அளவில் வசூல் சாதனைப் படைத்தது.
கலைஞர் டிவி
கலைஞர் டிவியில் அஜித் நடித்து கடந்த பொங்கலன்று வெளியான “துணிவு” படம் ஒளிபரப்பாகவுள்ளது. ஹெச்.வினோத் இயக்கிய படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கைன், பாவ்னி ரெட்டி, அமீர் ஆகியோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைத்தார்.
இதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படமும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படம் கடந்த ஆயுதபூஜையன்று விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தற்போது கலைஞர் டிவிக்கு சாட்டிலைட் உரிமை கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் டிவி
விஜய் டிவியில் தீபாவளி தினத்தன்று காலை 11 மணிக்கு அசோக் செல்வன், சரத்குமார் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற க்ரைம் த்ரில்லர் படமான ‘போர் தொழில்’ ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதேபோல் மாலை 6 மணிக்கு விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்து, தயாரித்து வெளியான “பிச்சைக்காரன் 2” படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல சேனல்கள் எந்த மாதிரியான படங்களை அறிவிக்கப்போகிறார்கள் என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.