OTT Release: இன்று முதல் ஓ.டி.டி.யில் காணலாம்! ’காதர் பாட்சா’ முதல் ’ஃபர்ஹானா’ வரை!- முழு விவரம்!
OTT Release: ஓ.டி.டியில் இன்று வெளியாகும் திரைப்படங்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது தனி அனுபவமாக இருந்தாலும், சில நேரங்களில் இன்னுமொரு முறை அல்லது நம் வசதிக்கேற்றார் போல படங்களைப் பார்க்க வசதியானது என ஓ.டி.டி. தளத்தை கூறலாம். ஓ.டி.டி. வருகைக்கு பிறகு, எந்த படமாக இருந்தாலும், திரையரங்குகளில் வெளியான பின்பு ஓரிரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து ரிலீஸாகிவிடும். நம் விருப்பத்திற்கேற்ப, எத்தனை முறை வேண்டுமானலும் நினைத்த நேரத்திற்கு கண்டுகளிக்கலாம். அப்படி, இன்று (07/07/2023) ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் பற்றியதுதான் இத்தொகுப்பு.
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் திரைக்குவந்திருக்கும் படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இயக்குநர் முத்தையாவுடன் முதன்முறையாக இணைந்துள்ளார் ஆர்யா. பிரபு, பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், தமிழ், ரேணுகா எனப் பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாக பல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், ஜீ5 ஓடிடியில் இன்று வெளியாகிறது.
டக்கர்
இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் 'டக்கர்’. நடிகை திவ்யான்ஷா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் படத்தில் நடித்துள்ளனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் வெளியானது. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளது.பணக்காரனாக ஆக வேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வருகிறார் குணசேகரன் ( சித்தார்த்) . ரெஸ்டாரெண்ட், பார், ஜிம் என்று ஒவ்வொரு இடமாக வேலை செய்து அங்கு தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதால் அவரால் அந்த வேலையில் நிலைத்து இருக்க முடிவதில்லை. அந்த காரில் கடத்தப்பட்ட பணக்கார பெண்ணான ஹீரோயின் இருக்கிறார். இவர்களின் வாழ்க்கை எப்படி இணைகிறது? சித்தார்த் தன் லட்சியத்தை அடைந்தாரா? என்பதே இப்படத்தின் கதையாகும். ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற டக்கர் இன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
போர்தொழில்
தமிழ் சினிமாவில் சூப்பரான த்ரில்லர் திரைப்படம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியிலாகவும் நல்ல ஹிட். கடந்த ஜூன் 9ஆம் தேதி அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத் குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், சரத்பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘போர் தொழில்’.சுமார் ஆறு கோடி செலவில் பெரும் விளம்பரங்கள், ப்ரொமோஷன்கள் இன்றி வெளியான போர் தொழில் திரைப்படம் முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பை பெற்றது. சிறப்பான த்ரில்லர் படம் என்று பாராட்டுகளை பெற்றது. இது சோனி லைவ் ஓ.டி.டி. தளத்தில் இன்று வெளியாகிறது.
ஃபர்ஹானா
ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம், ‘ஃபர்ஹானா’. இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். ஒரு நாள் கூத்து, மாஸ்டர் போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, கிட்டி, அனுமோல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேலைக்கு செல்லும் நடுத்தர இஸ்லாமிய பெண் பற்றிய கதை இது. திரைக்கு வந்த சில வாரங்கள் ஆன நிலையில், இப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை, சோனி லை வ் தளத்தில் காணலாம்.