கோலிவுட்டில் கூடுதல் ஃபேமஸ்.. முதலிடம் பிடித்த விஜய்..
அதிக ரசிகர்களை கொண்ட விஜய், அஜித், சூர்யா ஆகிய மூன்று நட்சத்திரங்கள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர்.
ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தையும் அஜித் 2
ஆம் இடத்தையும், சூர்யா 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர் .
#JUSTIN | பிரபலமான நடிகர்கள் பட்டியல் - நடிகர் விஜய் முதலிடம்!https://t.co/wupaoCzH82 | #Vijay #AjithKumar #Suriya @actorvijay @Suriya_offl pic.twitter.com/TW7hrvuJUF
— ABP Nadu (@abpnadu) September 14, 2022
ஆர்மேக்ஸ் மீடியா என்பது, இந்தியாவின் ஊடக ஆலோசனை நிறுவனம் ஆகும். திரைப்படங்கள், டிவி, ஓடிடி, செய்திகள், இசைக்கான கண்காணிப்பு, சோதனை மற்றும் முன்கணிப்பு & ஆலோசனை போன்ற சேவைகளை செய்யும் குழுமம் ஆகும்.
Ormax Stars India Loves: Most popular male Tamil film stars (Aug 2022) #OrmaxSIL pic.twitter.com/4pZZunSpZM
— Ormax Media (@OrmaxMedia) September 14, 2022
இந்த இயக்கம் சமீபத்தில், கோலிவுட் நடிகர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் என்ற ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், பிரபலத்தின் அடிப்படையில் அதிக ரசிகர்களை கொண்ட விஜய், அஜித், சூர்யா ஆகிய மூன்று நட்சத்திரங்கள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர். இவர்களை அடுத்து கமல் ஹாசன் நான்காம் இடத்திலும் விஜய் சேதுபதி ஜந்தாம் இடத்திலும் சிவகார்த்திகேயன் ஆறாம் இடத்திலும் விக்ரம் எட்டாம் இடத்திலும் ரஜினிகாந்த் ஒன்பதாவது இடத்திலும் கார்த்திக் சிவகுமார் 10 வது இடத்திலும் உள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram
#AjithKumar Mass overloaded 😎😍✨ pic.twitter.com/C78y3cARrY
— Mohan G Kshatriyan (@mohandreamer) September 12, 2022
முதல் மூன்று இடத்தை பிடித்த விஜய், அஜித், மற்றும் சூர்யா ஆகிய நடிகர்கள் அவர்களின் அடுத்தடுத்து நடித்து வரும் படங்களில்
பிசியாக உள்ளார். நடிகர் விஜய்க்கு வாரிசு, தளபதி 67 ஆகிய படங்களும் நடிகர் அஜித்துக்கு ஏகே 61, ஏகே 62 என இரண்டு படங்களும் வணங்கான், வாடிவாசல், சூர்யா 42 என சூர்யாவிற்கு ஆகிய மூன்று படங்கள் கைவசமாக வைத்துள்ளனர்