Irfan Khan: ”உங்களுக்கு இருப்பது ரசிகர்கள் இல்லை; குடும்பம்”: இர்ஃபான் கானின் 4-வது ஆண்டு நினைவு தினம்
புற்றுநோயால் உயிரிழந்த நடிகர் இர்ஃபான் கானின் நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று
இர்ஃபான் கான் (Irfan Khan)
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் இர்ஃபான் கான். பிக்கு , லை ஆஃப் ஃபை , த லஞ்சு பாக்ஸ், தல்வார், ஆகிய படங்களில் மிகையற்ற எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடித்தவர். பிரதானமாக இந்திப் படங்களில் நடித்தாலும் உலகம் முழுவதும் கனிசமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு புற்றுநோயால் ஏப்ரல் 29 ஆம் தேதி இர்ஃபான் கான் உயிரிழந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறார் இர்ஃபான் கான்.
உங்களுக்கு இருப்பது ரசிகர்கள் இல்லை குடும்பம்
View this post on Instagram
நடிகர் இர்ஃபான் கானைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் பாபில் கான் திரைத் துறையில் களமிறங்கி உள்ளார். நெட்ஃப்ளிக்ஸ்சில் வெளியான கலா மற்றும் த் ரயில்வே மென் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். தனது தந்தையையும் அவருடன் தனக்கு இருந்த உறவையும் பல்வேறு தருணங்களில் நினைவுகூர்ந்து வருகிறார் பாபில் கான். இர்ஃபான் கானின் நினைவு தினத்திற்கு சில தினங்கள் முன்பாக தனது தந்தையைப் பற்றி பாபில் கான் ஒரு பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இதில் அவர் “அன்பும் கருணையும் உள்ள ஒரு போர் வீரனாக இருக்க நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். நீங்கள் எனக்கு நம்பிக்கையைக் கற்றுக் கொடுத்தீர்கள், மக்களுக்காகப் போராடக் கற்றுக் கொடுத்தீர்கள். உங்களுக்கு இருப்பது ரசிகர்கள் இல்லை, உங்களுக்கு இருப்பது ஒரு குடும்பம். நீங்கள் என்னை அழைக்கும் வரை நான் நம் மக்களுக்காகவும் நம் குடும்பத்திற்காகவும் போராடுவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எந்த சூழலிலும் நான் முயற்சியை கைவிட மாட்டேன். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.