Oke Oka Jeevitham : கணம்... ஒகெ ஒகெ ஜீவிதம்... தமிழ், தெலுங்கு இரண்டிலும் பாசிட்டிவ்... நெகிழ்ந்த இயக்குனர்!
Oke Oka Jeevitham : ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியானது "கணம்" மற்றும் "ஒகெ ஒக ஜீவிதம்" திரைப்படம்.
Oke Oka Jeevitham Press meet: பாசிட்டிவ் விமர்சனங்கள் பெரும் "ஒகெ ஒக ஜீவிதம்" திரைப்படத்தின் பிரஸ் மீட் வீடியோ
டைம் மெஷினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஸ்வாரஸ்யமான திரைப்படம் "கணம்". வழக்கமாக வெளியாகும் ஆக்ஷன், த்ரில்லர் என அதிரடியான படங்களுக்கு மத்தியில் ஒரு அமைதியான கதைக்களத்தை திரையில் கொண்டு வந்ததற்கு இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் பாராட்டை பெறுகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியானது "கணம்" மற்றும் "ஒகெ ஒக ஜீவிதம்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களின் விமர்சனம் பட குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எதிர்பார்த்த படம் இப்போது திரையரங்கில்:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரையரங்கில் வெளியான "கணம்" திரைப்படத்தில் ஷர்வானந்த், அமலா, சதிஷ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் "கணம்" என்ற பெயரிலும் தெலுங்கில் "ஒகெ ஒக ஜீவிதம்" என்ற பெயரிலும் ஒரே சமயத்தில் வெளியானது. குடும்ப பின்னணியோடு, தாய் பாசம் கொண்ட கதையாக இப்படம் வெளியாகியுள்ளது. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நகைச்சுவையோடு கலந்து உணர்ச்சிகளையும் சேர்த்து மிகவும் அழகாக படமாக்கியுள்ளார் இயக்குனர். அமலா அக்கினேனி ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. மேலும் ஹீரோவின் அம்மாவாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமலா. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நேர்மறையான விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.
Watch Director @twittshrees's speech at the #OkeOkaJeevitham Thank you meet💥🔥
— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 10, 2022
▶️ https://t.co/UMg5erNG5v
IN CINEMAS NOW💥@ImSharwanand @riturv @amalaakkineni1 @vennelakishore @priyadarshi_i @prabhu_sr pic.twitter.com/CAjwYMIrBc
டோலிவுட் பிரஸ் மீட் :
"கணம்" மற்றும் "ஓகே ஓக ஜீவிதம்" படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இந்த மீட்டில் படத்தின் இயக்குனர் பேசிய வீடியோ தற்போது யூ டியூப்பில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த திரை ரசிகர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக். படத்தின் அங்கமாக இருந்த அனைவர்க்கும் தனது நன்றிகளை இந்த பிரஸ் மீட் மூலம் தெரிவித்து கொண்டார். சமூகவலைத்தளங்களில் இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளன.
#OkeOkaJeevitham is loaded with entertainment and emotions and people are just loving it ❤️
— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 10, 2022
IN CINEMAS NOW💥
Book your 🎟️ now and experience the magic ❤️🔥
- https://t.co/QjIwiCZMA7@ImSharwanand @riturv @amalaakkineni1 @twittshrees @prabhu_sr pic.twitter.com/tQgw4XzCMc