பாலிவுட் சூப்பர் ஸ்டார்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய ‘கான்’ நடிகர்! யாருனு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!
உலக அளவில் 2000 கோடி ரூபாய் வசூலித்த சூப்பர் ஸ்டார் நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கானுக்கே ஷாக் கொடுத்த நடிகர் யார் தெரியுமா?
பாலிவுட் சினிமாவின் கடந்த 30 ஆண்டு கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அதில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த படம் என்றாலே அதன் ஹீரோ ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கானாக தான் இருக்கும். இப்படி கான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் பாலிவுட்டில் புதிதாக ஒரு கான் நடிகர் தனது கால் தடத்தைப் பதித்துள்ளார்.
முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர்கான் ஆகியோரின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை யாராலும் மறுக்க முடியாது. ஷாருக்கானின் படங்கள் ஒட்டுமொத்தமாக உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. அதே சமயம் சல்மான் 7 ஆயிரம் கோடியும், அமீர் 6500 கோடியும் வசூலிக்கின்றனர்.
ஆனால் மறைந்த இர்ஃபான் கான் நடித்த படங்களின் வசூலை விட மிக மிகக்குறைவு. 2020ம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்த இர்ஃபான் பாலிவுட்டைத் தாண்டி ஹாலிவுட்டிலும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர். ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம் இவர் மீது ஹாலிவுட்டின் ஸ்பாட் லைட் வெளிச்சம் பட காரணமாக அமைந்தது. தி அமேசிங் ஸ்பைடர் மேன், லைஃப் ஆஃப் பை, ஜுராசிக் வேர்ல்ட், இன்ஃபெர்னோ போன்ற ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது பாலிவுட் படங்கள் 2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. இவர் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படங்கள் ஒட்டுமொத்தமாக 2.5 பில்லியன் டாலர்கள், அதாவது 22 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வசூலித்துள்ளன.
பாலிவுட்டின் 3 சூப்பர் ஸ்டார்களையும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியால் மட்டுமல்ல, தனது நடிப்பாலும் வென்றுள்ளார். இந்தியில் இர்ஃபான் கான் நடித்த அனைத்து மெயின் மற்றும் துணைக் கதாபாத்திரங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.