‛எவன் வீட்டு காசுல இப்படி அட்டகாசம் பண்றீங்க...’ மாஸ் ஹீரோக்களை வெளுத்தெடுத்த கே.ராஜன்!
அறிமுக இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் “நாட் ரீச்சபிள்” என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சுபா தேவராஜ், சாய் கான்யா என இரண்டு புதுமுக நாயகிகள் நடித்துள்ளனர்.
பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பிரபல ஹீரோக்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் பட நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர்கள் படும் கஷ்டம் குறித்து தொடர்ந்து வெளிப்படையாக பேசி வருகிறார். அப்படி பேசும் போது பல நடிகர்,நடிகைகளை நேரடியாக விமர்சித்தது திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது பெரிய ஹீரோக்களை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் “நாட் ரீச்சபிள்” என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சுபா தேவராஜ், சாய் கான்யா என இரண்டு புதுமுக நாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட கே. ராஜன் தமிழ் சினிமாவை சின்ன பட்ஜெட் படங்கள் தான் வாழ வைப்பதாகவும், பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பவர்கள் துரோகம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் எடுக்குறது தமிழ் படம், பாக்குறது தமிழ் ரசிகர்கள், நடிக்கிறது தமிழ் ஹீரோ. ஆனால் படத்தின் ஷூட்டிங் மட்டும் ஆந்திரா, ஹைதரபாத் ஆகிய இடங்களில் நடக்கிறது. அப்ப தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை யார் காப்பாற்றுவது?... நான் ரஜினி சாரிடம் கூட இதுதொடர்பாக வேண்டுகோள் வைத்தேன். என்னால் யாரையும் அதிகாரம் பண்ண முடியாது. அப்படி செய்தால் நம்மளை க்ளோஸ் பண்ணி விடுவார்கள்.
நடிகர்களுக்கு என்ன நோவு...நான் எல்லா நடிகர்களையும் கேக்குறேன். சும்மா ஜம்முன்னு குளுகுளு கார்ல வர்றீங்க..கேரவன்ல உட்கார்ந்து சீட்டு ஆடுறீங்க..அப்புறம் குஜால்லாம் பண்றீங்க...ஷாட் எடுக்க கூப்பிட்டா வர்றது இல்ல. எவன் வீட்டு காசுல எந்த கேரவன்ல உட்காந்துகிட்டு ஷாட்டுக்கு வர மாட்டேன்னு சொல்றீங்க? விளையாட்டு நடக்குது. நான் எல்லாரையும் குறிப்பிட்டு சொல்லல. இது நடக்குது. அரை மணி நேரம் தாமதாமக படப்பிடிப்பு நடந்தாலும் அந்த தயாரிப்பாளரின் நிலைமை என்ன தெரியுமா? சின்ன படத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.3 லட்சமும், பெரிய பட்ஜெட் படத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 லட்சமும் செலவாகிறது.
அது மட்டுமல்லாமல் இப்போது பவுன்சர்கள் செலவு என அனைத்தையும் ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குநர்கள் செய்கிறார்கள். இப்படி தயாரிப்பாளர்களின் பணத்தை வீணாக்காமல் அவருக்கு ஒத்துழைத்து அந்த பணத்தை படத்திற்கு மட்டுமே செலவு செய்தால் அப்படம் வெற்றி பெறும் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்