Watch Video : பூவுனு நினைச்சியா? நெருப்புடா..! பிறந்ததுமே புஷ்பா ஸ்டைலில் மாஸ் காட்டிய குழந்தை! வைரல் போட்டோ!
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா படம் அல்லுவின் ஸ்டைல், ராஷ்மிகாவின் க்ளாமர், சமந்தாவின் ஓ அன்ட்டாவா குத்துப் பாடல் எனப் பல விஷயங்களால் பிரபலமானது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா படம் அல்லுவின் ஸ்டைல், ராஷ்மிகாவின் க்ளாமர், சமந்தாவின் ஓ அன்ட்டாவா குத்துப் பாடல் எனப் பல விஷயங்களால் பிரபலமானது. ஆனால் அல்லு அர்ஜூன் தாடியை கோதும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் ஸ்டைலும் கடல் கடந்து ரசிகர்களைப் பெற்றுவிட்டது.
விளையாட்டு வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் என பலரும் புஷ்பாவை இமிடேட் செய்து அப்ளாஸை அள்ளிவிட்டனர். அவர்கள் மட்டும்தானா என்றால் இல்லை, குட்டிக் குழந்தைகள் ஸ்ரீவள்ளி பாடலுக்கு அல்லுவைப் போல் ஆடி அசத்தினர்.
அட இதுவெல்லாம் பரவா இல்லீங்க.. இப்போ இன்டர்நெட்டில் வைரலாகிக் கொண்டிருக்கும் புஷ்பா தி யங்கஸ்ட் பற்றி அறிந்துகொள்வோம் வாங்க.
ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பச்சிளங் குழந்தை வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். வெறும் 3 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று புன்னகையுடன் தனது தாடையைத் தடவுகிறது. அது அச்சு அசல் அல்லு அர்ஜூன் புஷ்பா படத்தில் தாடியைக் கோதும் மேனரிஸ்ம் போலவே உள்ளது. அந்த வீடியோவில் அல்லு வசனம் வாய்ஸ் ஓவராகச் செல்கிறது. வீடியோவை ட்விட்டராட்டிகள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
ये तो पक्का कभी झुकेगा नहीं.🤩 pic.twitter.com/orOnRwPpPG
— Awanish Sharan (@AwanishSharan) March 7, 2022
ஒரு நெட்டிசன், இந்தக் குழந்தையின் தாயார், குழந்தை வயிற்றில் இருந்த போது புஷ்பா படத்தை ரிபீட் மோடில் பார்த்திருப்பார் என்று கூறியுள்ளார். இன்னும் பலரும் பலவித கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இன்னொரு ட்விட்டராட்டியோ குழந்தைக்கு புதிய அடைமொழியைக் கொடுத்துள்ளார். Youngest Pushpa (யங்கஸ்ட் புஷ்பா) என்று குழந்தைக்கு செல்லப் பெயர் வைத்துள்ளார்.
I think this baby watched the movie #Pushpa from mother Womb😀😀 @alluarjun https://t.co/FpySmXFNHr
— Ramakrishna reddy🇮🇳🇮🇳 (@Buneed) March 8, 2022
Youngest Pushpa... https://t.co/M1uLBp5wex
— Sanjeev kartikey (@KartikeySanjeev) March 8, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்