மேலும் அறிய

Dhanya Balakrishna: தமிழர்களை இழிவுபடுத்திய தன்யாவுக்கு வாய்ப்பா? - இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு குவியும் கண்டனம்!

Dhanya Balakrishna : பல ஆண்டுகளுக்கு முன்னர் ட்வீட் மூலம் சர்ச்சையை ஏற்படுத்திய தன்யா பாலகிருஷ்ணாவை, லால் சலாம் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பளித்த ஐஸ்வர்யாவிடம் நெட்டிசன்கள் கேள்வி.  

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்திலும் , முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவும்  கேமியோ ரோலில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கிரிக்கெட் விளையாட்டை மையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதில் நடிகர் ரஜினிகாந்தை  சங்கி என விமர்சனம் செய்யப்பட்டதற்கு பொங்கி எழுந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 

 

Dhanya Balakrishna: தமிழர்களை இழிவுபடுத்திய தன்யாவுக்கு வாய்ப்பா? - இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு குவியும் கண்டனம்!
இந்நிலையில் 'லால் சலாம்' படத்தின் ஹீரோயினாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளார். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பெங்களூருவை சேர்ந்த தான்யா பாலகிருஷ்ணா. இவர்  காதலில் சொதப்புவது எப்படி மற்றும் பல படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் CSK vs RCB  அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது நடிகை தன்யா பாலகிருஷ்ணா செய்த ட்வீட் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

"Dear Chennai, you beg for water we give! You beg for electricity, we give! ur people come and occupy our beautiful city and kocha paduthify it, we allow and nw u wr at our mercy to go to playoffs, we let be!! Like this you begging we giving!" என நடிகை தன்யா ட்வீட் செய்து இருந்தார்.

(தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால்... தருகிறோம் ) 

நடிகை தன்யாவின் இந்த ட்வீட்டால் HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கானது. அதனால் கடுப்பான தன்யா "இனி நான் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன். நான் நடிப்பதாக சொன்ன தமிழ் படங்களில் இருந்தும் வாபஸ் பெறுகிறேன். நான் இனி தமிழ் சினிமாவுக்கு வரவே மாட்டேன்" என கூறியிருந்தார். 

 

Dhanya Balakrishna: தமிழர்களை இழிவுபடுத்திய தன்யாவுக்கு வாய்ப்பா? - இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு குவியும் கண்டனம்!

இப்படி தமிழர்களை கொச்சையாக பேசிய தான்யா பாலகிருஷ்ணா தான் இன்று 'லால் சலாம்' படத்தின் ஹீரோயின். தமிழகர்களை கொச்சைப்படுத்தி பேசி, தமிழ் சினிமாவில் இனி நடிகர் மாட்டேன் என சொன்ன ஒரு நடிகையை கொண்டு வந்து தன்னுடைய படத்தில் ஐஸ்வர்யா நடிக்க வைத்துள்ளார். 

நடிகர் ரஜினியை சங்கி என விமர்சனம் செய்ததற்கு பொங்கியெழுந்த ஐஸ்வர்யா ஏன் தன்யாவை தமிழ் படத்தில் நடிக்க வைக்க வேண்டும். வேறு நடிகைகளே இல்லையா? இது தெரிந்தும் ரஜினிகாந்த் எப்படி எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார் என நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதில் என்ன?  என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget