Air India Express special offer: வெறும் ரூ.1950க்கு விமான டிக்கெட்.! பயணிகளுக்கு ஜாக்பாட்- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அசத்தல் அறிவிப்பு
Air India Express special offer: விமானத்தில் பறக்க ஆசைப்படுபவர்களுக்கு சூப்பர் சான்ஸ் உருவாகியுள்ளது. அதன் படி இன்றும், நாளையும் முன்பதிவு செய்யும் பயணிகள் 1950 ரூபாய் கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.

விமானத்தில் பறக்க சூப்பர் சான்ஸ்
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விமானம் சத்தம் கேட்டால் வானத்தை பார்த்து விமானத்திற்கு கை காட்டி மகிழ்ச்சி அடைவார்கள். அப்படி வானத்தில் பறக்கும் விமானத்தை பார்த்தவர்கள் தற்போது அந்த விமானத்திலேயே பறக்க சூப்பர் சான்ஸ் அமைந்துள்ளது. அதன் படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புத்தாண்டையொட்டி பயணிகளுக்கு சலுகையை அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல சிறப்பு கட்டணங்களை வழங்கும் மாதாந்திர 'பேடே சேல்'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி பயணிகள் உள்நாட்டு வழித்தடங்களில் ரூ.1,950 முதல் பறக்கலாம் எனவும், வெளிநாடு வழித்தடங்களில் ரூ.5,590 வரையிலான கட்டணங்களில் பயணம் செய்யலாம் எனவும். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
1950 ரூபாய்க்கு விமான டிக்கெட்
இதன் படி இன்று (டிசம்பர் 30) முதல் ஜனவரி 1 வரை விமான நிறுவனத்தின் வலைத்தளம், மொபைல் செயலி மற்றும் அனைத்து முக்கிய முன்பதிவு மையங்களிலும் சிறப்பு கட்டணத்தில் விமான முன்பதிவுகளை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கட்டணங்கள் மூலம் 2026 ஜனவரி 12 முதல் அக்டோபர் 10 வரை உள்நாட்டு பயணத்திற்கும், ஜனவரி 12 முதல் டிசம்பர் 31, 2026 வரை வெளிநாட்டிற்கும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் மொபைல் செயலியில் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளுக்கும் விமான நிறுவனம் எந்த சர்வீஸ் சார்ஜ் கட்டணமும் இல்லையென கூறப்பட்டுள்ளது.
விமான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
இதுமட்டுமில்லாமல் நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தும் நபர்களுக்கும் இணையதளத்தில் facility charges இல்லாமல் அனுபவிக்கலாம். மேலும் குறைந்த சுமையுடன் பயணம் செய்யும் பயணிகளுக்காக ‘லைட் ஃபேர்’ என்ற புதிய கட்டணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களில் 15 கிலோ கிராமுக்கு ரூ. 1,500 மற்றும் சர்வதேச விமானங்களில் 20 கிலோகிராமுக்கு ரூ. 2,500 என்ற தள்ளுபடி செக்-இன் பேக்கேஜ் கட்டணங்களையும் வழங்குவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், லாயல்டி உறுப்பினர்களுக்கு வணிக வகுப்பு டிக்கெட்டுகளில் 25% தள்ளுபடி, Tata NewPass Rewards உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ.250 வரை தள்ளுபடி, மாணவர்கள், மூத்த குடிமக்கள், ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனிச்சலுகைகளையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.



















