நம்ம பாக்கியலட்சுமி கோபியா இது? பழசை கிளறி ஃபயர் விடும் நெட்டிசன்கள்!
’கோபி’ சதீஷ் குமாரின் பழைய நாடகங்களையும் தேடி எடுத்துப் பார்த்தும், அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய தேதிக்கு தினசரி சீரியல் பார்வையாளர்கள் மட்டுமின்றி, 2K கிட்ஸ் எனப்படும் அடுத்த தலைமுறையினர், நெட்டிசன்ஸ் என அனைவரது பேராதரவையும் பெற்று மோஸ்ட் பாப்புலர் சீரியலாக விளங்குகிறது விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' தொடர்.
இந்தத் தொடரில் பாக்கியலட்சுமியாக சுசித்ராவும், அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ் குமாரும், அவரது மற்றொரு காதலியாக ராதிகா எனும் கதாபாத்திரத்தில் ரேஷ்மாவும் நடித்து வருகின்றனர்.
கோபியாக கலக்கும் சதீஷ்!
இதில் இரண்டு பெண்களை மாறி மாறி ஏமாற்றும் வில்லன் கோபி கதாபாத்திரத்தைத் திட்டியபடியும், கோபியாக நடிக்கும் சதீஷின் நடிப்புத் திறமையை புகழ்ந்தபடியும் இந்த சீரியலை பார்த்து அதன் டிஆர்பி ரேட்டிங்கை மக்கள் எக்கச்சக்கமாக ஏற்றியுள்ளனர்.
மேலும் பல ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வரும் சதீஷ் குமார், இந்த பாக்கியலட்சுமி தொடரின் கோபி கதாபாத்திரத்தின் மூலம் வெள்ளித்திரை நடிகர்களையே மிஞ்சும் அளவுக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்று சீரியல் தொடங்கி இன்ஸ்டா வரை ஜம்மென்று வலம் வருகிறார்.
’கோபி’ சதீஷின் பழைய சீரியல்களை கிளறும் ரசிகர்கள்
தன் சீரியல் உலக வாழ்வில், ஹீரோ கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம், கடவுள் கதாபாத்திரம் என அனைத்துவித கேரக்டர்களையும் சதீஷ் குமார் நடித்துள்ள அவருடைய தற்போதைய ரசிகர்கள், சதீஷ் குமாரின் பழைய நாடகங்களையும் தேடி எடுத்துப் பார்த்தும், அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னதாக பழம்பெரும் இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய சீரியல் ஒன்றை ரசிகர்கள் பகிர்ந்து ட்ரெண்ட் செய்துள்ளனர். ’றெக்கை கட்டிய மனசு’ எனும் இத்தொடரில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே கோபி கதாபாத்திரத்தை விட பெரிய வில்லனாகக் கலக்கியுள்ளதாகப் பூரித்தும் ஷேர் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
இதேபோல் முன்னதாக சதீஷ் குமார் பெருமாள், எம்.ஜி.ஆர் கெட் அப்களில் இருக்கும் புகைப்படங்களும் இன்ஸ்டாவில் அவரது ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டன.
சதீஷ் கடந்துவந்த பாதை
View this post on Instagram
திரைத்துறையில் மாடலிங், விளம்பரங்கள் என தனது கரியரைத் தொடங்கிய சதீஷ் ’மின்சாரப்பூவே ’எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சூலம், ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம் உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள சதீஷை பாக்கியலட்சுமி கோபி கதாபாத்திரம் மக்களிடம் மிகப் பெரிய அளவில் கொண்டு சேர்த்துள்ளது.