Nenjukku Neethi Twitter Review: நெஞ்சுக்கு நீதி திரைப்படம் எப்படி..? ட்விட்டர்வாசிகள் சொல்லுவது என்ன..? குவியும் கருத்துகள்!
நீண்ட இடைவெளிக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில், அருண்குமார் காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியானது.
இந்தியில் தேசிய விருது பெற்ற ‛ஆர்ட்டிக்கல் 15’ படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. கொலை செய்யப்பட்டு தற்கொலையாக மாற்றப்படும் இரு பெண்களின் மரணம் தான் படத்தின் கரு. அதை தமிழக அரசியலுக்கு ஏற்றபடி கலவை செய்து, கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி டைட்டிலோடு, உதயநிதி நடித்து வெளியாகியிருக்கிறது நெஞ்சுக்கு நீதி.
இந்தநிலையில், நெஞ்சுக்கு நீதி படம் எப்படி இருக்கு..? ட்விட்டர்வாசிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை கீழே காணலாம்.
Extraordinary reports for #NenjukkuNeedhi . Congratulations @Udhaystalin anna. Again jeyuchuteenga @Arunrajakamaraj bro.
— Arvindh Srinivasan (@dirarvindh) May 20, 2022
Can't wait to watch it.@RedGiantMovies_ @ZeeStudios_ @BayViewProjOffl #Nenjukkuneethi
@BoneyKapoor #Nenjukkuneethi is going to create a buzz in town for it's powerful dialogues and executing the same which will suit tamil audience. Good content driven by BGM @dhibuofficial and @Arunrajakamaraj Magic 🙌👏🤩😍🔥💐
— Madhusudhanan Varadarajulu (@Madhusu76425277) May 20, 2022
Show time - #NenjukkuNeethi
— SK (@sk_3672) May 20, 2022
@Udhaystalin @Arunrajakamaraj pic.twitter.com/6SJd83hD8a
முன்னதாக, 2012 ல் ராஜேஷ் இயக்கத்தில் ‛ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோ உதயநிதி உருவானார். ‛திமுக ஆட்சியில் தயாரிப்பாளராக இருந்தவர்கள், எங்கள் ஆட்சியில் நடிக்கவும் செய்கிறார்கள்’ என்று அதிமுகவினர் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு, அப்போது அது பார்க்கப்பட்டது.
முதல்படம், எதிர்பார்த்த வெற்றியை பெற, உதயநிதி அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன் என , இடைவெளிக்கு இடைவெளி தனது படங்களை அவ்வப்போது இறக்கிக் கொண்டே இருந்தார் உதயநிதி. கடந்த 2020 ல் மிஸ்கின் இயக்கத்தில் அவர் நடித்த சைக்கோ நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின், நீண்ட இடைவெளிக்குப் பின் போனிகபூர் தயாரிப்பில், அருண்குமார் காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்