மேலும் அறிய

வெளியேறிய பாலையா...ஜெயிலர் 2 படத்தில் இணைந்த சந்தானம்..ஃபயர் மோடில் வேலைசெய்யும் நெல்சன்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ரஜினியின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. அண்மையில் வெளியான கூலி திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற நிலையில் ஜெயிலர் 2 படத்தின் மேல் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ரஜினி தவிர்த்து இப்படத்தில் பல்வேறு மொழியிலிருந்து நடிகர்கள் நடித்துள்ளார்கள். அந்தவகையில் சந்தானம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயிலர்  2 படத்தில் சந்தானம் 

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 172 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜெயிலர் 2. முதல் பாகத்தை தொடர்ந்து இப்பாகத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். முந்தைய பாகத்தில் ஷிவராஜ்குமார் , மோகன்லால்  கேமியோ ரோலில் நடித்திருந்தனர். குறைவான காட்சிகளே என்றாலும் இருவரது கதாபாத்திரத்தை நெல்சன் கையாண்டிருந்த விதம் பலரை கவர்ந்தது. அதேபோல் ரஜினிக்கு ஏற்ற விதமான மாஸ் காட்சிகளும் , நெல்சனின் தனித்துவமான டார்க் ஹ்யூமர் இப்படத்தில் சிறப்பாக அமைந்தது படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. அந்த வகையில் இரண்டாம் பாகத்திலும் இதே மாஸ் , மற்றும் ஹ்யூமரை நெல்சன் கையாள்வார் என எதிர்பார்க்கலாம். 

அந்த வகையில் சந்தானம் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நகைச்சுவை நாயகனாக உச்சத்தைத் தொட்ட சந்தானம் நாயகனாக நடிக்கத் தொடங்கியபின் தமிழ் கமர்சியல் படங்களில் பெரிய வெற்றிடம் இருந்து வருகிறது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

பாலையாவுக்கு பதில் சந்தானம் 

ஜெயிலர் 2 படத்தில் ரஜினி , மோகன்லால் , ஷிவராஜ்குமார் , எஸ்.ஜே சூர்யா , சூரஜ் வெஞ்சரமூடு , ஃபகத் ஃபாசில் , மிதுன் சக்கரவர்த்தி , வித்யா பாலன்  உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் பாலையா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்காக அவருக்கு ரூ 50 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.  தற்போது பாலையா படத்தில் இருந்து விலகியதாகவும் அவருக்கு பதிலாக சந்தானம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

லோகேஷ் விட்டதை பிடிப்பாரா நெல்சன் ?

தற்போது ஸ்டார் படங்கள் என்றாலே அதில் பல மொழிகளில் இருந்து நடிகர்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த நடிகர்களுக்கு சரியான கதாபாத்திரங்கள் வழங்கப்படாதது ரசிகர்களிடையே அதிருபதியை ஏற்படுத்தியுள்ளது . குறிப்பாக கடைசியாக வெளியான கூலி படத்தில் நாகர்ஜூனா , செளபின் சாஹிர் , உபேந்திரா போன்ற பல கதாபாத்திரங்கள் இருந்து அவர்களை பயண்படுத்திய விதம் விமர்சனத்திற்குள்ளானது. ஜெயிலர் படத்தில் கேமியோ ரோல் என்றாலும் நெல்சன் மோகன்லால் , ஷிவராஜ்குமார் போன்ற இரு பெரிய நடிகர்களை கையாண்டிருந்த விதம் பலரை கவர்ந்தது. அந்த வகையில் ஜெயிலர் 2 படத்தில் லோகேஷ் செய்ய தவறியதை நெல்சன் செய்வார் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget