Venkat Prabhu Movie: பிரபல நடிகருடன் கைகோக்கும் வெங்கட் பிரபு.. நாளை வெளியாகிறது முக்கிய அப்டேட்..!
பிரபல இயக்குநரான வெங்கட் பிரபு ஒரு முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடப்போவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரபல இயக்குநரான வெங்கட் பிரபு ஒரு முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடப்போவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர் குறிப்பிட்டு இருக்கும் அந்தப் பதிவில், “ மிகப் பெரிய அறிவிப்புக்கு எல்லாம் தயாராக இருக்கிறது. நாளை காலை 9:01 க்கு அந்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது என்று குறிப்பிட்டு, அதில் நாக சைதன்யாவை டேக் செய்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு வெங்கட் பிரபு நாக சைதன்யா இணையும் படம் குறித்தான அறிவிப்பு என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்தப்படம் குறித்தான அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு முன்னதாகவே தனது சமூகவலைதளபக்கங்களில் பதிவிட்டு இருந்தார். இந்தப்படம் நாக சைதன்யாவின் 22 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இந்தப்படம் குறித்தான அறிவிப்புதான் நாளை வெளியாக இருக்கிறது. முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்தப்படத்தில் வெங்கட் பிரபு திரைக்கதையை கையாண்ட விதமும், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் பெரிய அளவில் கவனம் பெற்றது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்தப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், விஜயின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்