Nazriya Fahadh : நஸ்ரியா - பகத் ஃபாசில் ரெண்டு பேருமே.. மக்களே உங்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் காத்திருக்கு.. இதைப் படிங்க..
அண்டே சுந்தரனிக்கி’ திரைப்படத்திற்காக தற்போது பாராட்டுகளைப் பெற்றுவரும் நஸ்ரியா தெலுங்கு சினிமாவில் தனது அறிமுகத்தை அழகான தற்செயல் என வர்ணித்துள்ளார்.
![Nazriya Fahadh : நஸ்ரியா - பகத் ஃபாசில் ரெண்டு பேருமே.. மக்களே உங்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் காத்திருக்கு.. இதைப் படிங்க.. Nazriya Nazim and Fahadh Faazil gets debut in Telugu film industry through Pushpa and Ante Sundaraniki Nazriya Fahadh : நஸ்ரியா - பகத் ஃபாசில் ரெண்டு பேருமே.. மக்களே உங்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் காத்திருக்கு.. இதைப் படிங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/11/f80fb3fb32d27c21ae297f9b9f48b849_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் நடிகர் நானி நடித்துள்ள `அண்டே சுந்தரனிக்கி’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆகியுள்ளார் மலையாள நடிகை நஸ்ரியா நசீம். அதே வேளையில் அவரது கணவரும் நடிகருமான ஃபகத் ஃபாசில் தெலுங்கு சினிமாவில் `புஷ்பா’ படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். `அண்டே சுந்தரனிக்கி’ திரைப்படத்திற்காக தற்போது பாராட்டுகளைப் பெற்றுவரும் நஸ்ரியா தெலுங்கு சினிமாவில் தனது அறிமுகத்தை அழகான தற்செயல் என வர்ணித்துள்ளார்.
`அண்டே சுந்தரனிக்கி’ வெளியீடு குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நஸ்ரியா தானும் தனது கணவர் ஃபகத் ஃபாசிலும் ஒரே நேரத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானது குறித்து பேசியுள்ளார். மேலும், தனது வீட்டில் அவருடன் சினிமா குறித்த விவாதங்கள் மேற்கொள்வதையும் பற்றி பேசியுள்ளார். `நாங்கள் இருவரும் ஒரே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாவது அழகான தற்செயலாக அமைந்திருக்கிறது. பிற தம்பதிகள் தங்கள் பணியைப் பற்றி விவாதிப்பது போல, நாங்களும் திரைப்படங்களைப் பற்றி விவாதிப்போம். அதிகமாக விவாதிக்க மாட்டோம். இருவரும் திரைப்படங்களை இணைந்து தயாரிப்பதால், எங்களால் திரைக்கதைகளைக் குறித்து கலந்துரையாட முடியாது.. தெலுங்கு சினிமாவைப் பொருத்தவரையில் மொழியைக் கற்றுக் கொள்வதே முதன்மைப் பணியாக இருந்தது’ எனக் கூறியுள்ளார் நடிகை நஸ்ரியா.
கடந்த 2020ஆம் ஆண்டு அன்வர் ரஷீத் இயக்கத்தில் உருவாகிய `ட்ரான்ஸ்’ திரைப்படத்தில் நஸ்ரியாவும், ஃபகத்தும் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பல்வேறு திரைப்படங்களை நஸ்ரியா தயாரித்துள்ளார். மேலும், அவரது `நஸ்ரியா நசீம் ப்ரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் கீழ் ஃபகத் ஃபாசில் நடித்திருந்த திரைப்படங்களையும் தயாரித்தார் நஸ்ரியா. மீண்டும் தனது கணவர் ஃபகத்துடன் இணைவது குறித்து கேட்கப்பட்ட போது பதிலளித்த நஸ்ரியா, `சில திரைக்கதைகளைக் கேட்டுள்ளோம்.. எனினும் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை.. அடுத்த சில மாதங்களுக்கு இணைந்து நடிக்கும் திட்டம் எதுவும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.
தற்போது தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ள `அண்டே சுந்தரனிக்கி’ படத்தில் லீலா என்ற கிறித்துவப் பெண்ணாக நடித்துள்ளார் நஸ்ரியா. பழைமைவாத பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற இளைஞனைக் காதலிக்கும் கதாபாத்திரம் நஸ்ரியாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சுந்தர் கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள நஸ்ரியா, `காமெடி படத்தில் நடிக்க அதிகமாக தன்னம்பிக்கை வேண்டும்.. உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில், அது உங்கள் முகத்தில் தெரிந்துவிடும்.. எனக்கு திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதற்கு பிடித்தது காமெடி திரைப்படங்கள் தான்.. காமெடி மட்டுமல்லாமல் கூடுதலாக பேசும் திரைப்படங்களும் பிடிக்கும்.. இது அப்படியான திரைப்படம்’ எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)