Nayanthara in KH234: உலகநாயகனுடன் முதல் முறையாக ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார்..? வெளியாகுமா அறிவிப்பு..?
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக இருக்கும் KH234 படத்தில் நடிகர் கமலுடன் நடிகை நயன்தாராவை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என தகவல்
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி, சிம்பு, தனுஷ் ஏராளமான நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார். சமீப காலமாக வுமன் சென்ரிக் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அபாரமான வளர்ச்சி :
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகை நயன்தாரா அதனை தொடர்ந்து சந்திரமுகி, யாரடி நீ மோகினி, கஜினி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். படிப்படியாக முன்னேறிய நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உச்சத்தை அடைந்துள்ளார்.
கமலுடன் மட்டும் டூயட் மிஸ்ஸிங் :
சினிமா துறையில் கடந்து 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வரும் நயன்தாரா ஏனோ இதுவரையில் உலக நாயகன் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடிக்கவேயில்லை. இது குறித்து நயன்தாரா எதுவும் இதுவரையில் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் வாய்ப்பு அமைந்தால் நிச்சயமாக நடிப்பேன் என்று மட்டும் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
முடிவெடுத்த இயக்குனர் மணிரத்னம் :
ரசிகர்களும் கமல் - நயன் காம்போவை திரையில் பார்க்க வேண்டும் என மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க இருக்கும் திரைப்படம் KH234. இயக்குனர் மணிரத்னம் இப்படத்தில் நடிகை நயன்தாராவை, கமல்ஹாசனுக்கு ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய சினிமாவட்டரங்கள் தெரிவிக்கின்றன. அது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்றாலும் விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு மாஸ் திரை நட்சத்திரங்களும் ஒன்றாக களத்தில் இறங்கினால் பட்டையை கிளப்பும். படப்பிடிப்பு துவங்கவும் இல்லை, பேச்சுவார்த்தை உறுதிப்படுத்தப்படவும் இல்லை. ஆனால் அதற்கு முன்னரே இந்த தகவலால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி வருகிறது.