Nayanthara: பிடிக்காது... ஆனாலும் தன் குழந்தைகளுக்காக அதிகாலையில் நயன்தாரா செய்த செயல்!
Nayanthara : நடிகை நயன்தாரா அதிகாலையிலேயே விமான நிலையத்துக்கு விரைந்து வந்தது குறித்து இன்ஸ்டா போஸ்ட் பகிர்ந்துள்ளார். அதற்கு என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் அழைக்கப்படுபவருமான நயன்தாரா மிகவும் பிஸியாக பேக் டூ பேக் படங்களில் நடித்து வருகிறார். எந்த அளவுக்கு சினிமாவில் பிஸியாக இருக்கிறாரோ அதே அளவுக்கு ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் பல தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
'நானும் ரவுடி தான்' படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இருவரும் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். மிகவும் க்யூட்டான இந்த ஜோடி சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவ். அவ்வப்போது ரொமான்டிக் கிளிக்ஸ், உயிர் மற்றும் உலக் உடனான அழகான தருணங்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்துவார்கள்.
அந்த வகையில் விக்னேஷ் சிவன் கையை இறுக்கி பிடித்தபடி ஒரு ரொமான்டிக் வாக் போகும் புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளியுள்ளார். சில நாட்கள் அவுட்டோர் ஷூட்டிங் சென்று வீடு திரும்பிய நயன்தாரா தனது கணவர் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட மனம் கவரும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அந்த அழகான போஸ்டுக்கு "என்னுடையது" என கேப்ஷன் வைத்துள்ளார்.
View this post on Instagram
அதற்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விமான நிலையத்தில் அதிகாலை 4.38 மணிக்கு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். "அதிகாலை விமானங்களை விரும்புபவள் நான் அல்ல. ஆனால் என்னுடைய குழந்தைகளை நான் விரைவில் சென்றடைய வேண்டும்" என போஸ்ட் பகிர்ந்து இருந்தார். அவரின் இந்த போஸ்டுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழில் மூக்குத்தி அம்மன் 2, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 , ஒரு குருவி, டெஸ்ட் மற்றும் தெலுங்கில் ஆட்டோ ஜனனி என கைவசம் பல படங்கிக் கமிட்டாகி உள்ள நயன்தாரா மீண்டும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படமான 'லயன்' படத்திலும் நடக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.