மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணையும் நயன்தாரா..
மலையாள படமான லூசிஃபரின் தெலுங்கு ரீமேக்கில் இருக்கும் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.
மலையாள படமான லூசிஃபரின் தெலுங்கு ரீமேக்கில் இருக்கும் கதாபாத்திரங்களில் முக்கிய வேடத்தில் நடிக்க நயன்தாரா இறுதி செய்யப்பட்டுள்ளார். இந்த திரைப்படத்தை மோகன்ராஜா இயக்குகிறார் , மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மோகன்லால் ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .
லூசிஃபர் அணி இதற்கு முன்பு மஞ்சு வாரியர் வேடத்தில் நடிக்க சுஹாசினி ,குஷ்பு , விஜயஷாந்தி மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . பின்பு நயன்தாரா அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் . இதற்கு முன்பு நயன்தாரா மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து சை ரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில் நடித்திருக்கிறார் . கடந்த ஜனவரி மாதம் லூசிஃபர் திரைப்படம் பூஜை போட்டு மார்ச் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கப்பட்டது . என்.வி.பிரசாத் மற்றும் கொனிடெலா புரொடக்ஷன்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் டோவினோ தாமஸின் பாத்திரத்தை சத்ய தேவ் காஞ்சரனா நடிக்கவிருக்கிறார் .