சூர்யா, விஜய்சேதுபதி நடிப்பில் நவரசா வெப் சீரீஸ் : வெளியானது ரிலீஸ் அப்டேட்
பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்சேதுபதி நடிக்கும் நவரசா வெப் சீரீஸ் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
9 வெவ்வேறு இயக்குநர்கள் 9 வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கி ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ள ஒரு இணைய தொடர் தான் நவரசா. பிரபல இயக்குநர் மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் Qube Cinemas நிறுவனங்களுடன் இணைந்து இயக்கும் இந்த இணைய தொடரை 9 இயக்குநர்கள் 9 பாகங்களாக இயக்கியுள்ளார். பிரபல நடிகர் அரவிந்த் சாமி இந்த 9 கதைகளில் ஒரு பாகத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் உள்பட இந்த இணைய தொடருக்கு 8 பேர் இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Netflix’s star studded #Navarasa is eyeing for an August 2021 release, tentatively August 6th. pic.twitter.com/fMJTaDTEfv
— LetsOTT GLOBAL (@LetsOTT) May 27, 2021
வெட்கம், வீரம், கருணை, அற்புதம், சிரிப்பு, பயம், அருவருப்பு மற்றும் கோபம் என்ற நவரசங்களை பிரதிபலிக்கும் 9 வித்தியாசமான கதைக்களங்களை கொண்டுள்ளது இந்த இணைய தொடர். ரவீந்திரன் பிரசாத் இயக்கத்தில் சித்தார்த், பார்வதி, ராஜேஷ், பாலச்சந்திரன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிக்க, இயக்குநராக களமிறங்கியிருக்கும் அரவிந்த்சாமி இயக்கும் ஒரு பாகத்தில் நடிகர் ஸ்ரீராம் நடிக்கிறார். அடுத்தபடியாக நம்பியார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ் மற்றும் ரேவதி ஆகியோர் நடிக்கின்றனர்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஒரு பாகத்தில் பிரபல நடிகர் சூர்யா நடிக்கிறார். அதேபோல ஹலிதா ஷமீம் மற்றும் பிரியதர்ஷன் இயக்கத்தில் இரண்டு பாகங்களில் யோகி பாபு நடித்துள்ளார். பிரபல இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, பிரசன்னா மற்றும் பூர்ணா ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ஒரு பாகத்தில் பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கின்றனர். இறுதியாக வசந்த் இயக்கும் பாகத்தில் அதிதிபாலன் நடித்துள்ளார்.
பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ள இந்த இணைய தொடர் ஏற்கனவே பிரபல நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இணைய தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி வெளியாகும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.