”காதல் கடிதம் தீட்டவே!” - சமந்தாவுடன் விவாகரத்து.. நாக சைதன்யாவுக்கு மீண்டும் காதலா?
அதில் ஹாலிவுட் நடிகர் மேத்யூ மேக்னாக்கி எழுதிய க்ரீன் லைட்ஸ் என்னும் புத்தகத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார்.
டோலிவுட் சூப்பர் ஜோடிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமந்தா குறித்து சர்ச்சைக்கருத்துகளும் பரவத் தொடங்கின. சமந்தாவும் இதற்குத் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வந்தார்.இருந்தாலும் நாக சைதன்யாவின் இன்ஸ்டா பக்கம் இதையடுத்து தொடர்ச்சியாக சைலண்ட்டாகவே இருந்து வந்தது.
View this post on Instagram
விவாகரத்து அறிவித்ததற்கு அடுத்து அவர் எதுவும் இன்ஸ்டா பதிவிடாத நிலையில் தற்போது முதன்முறையாக நேற்று இன்ஸ்டாகிராம் பதிவொன்றை செய்துள்ளார். அதில் ஹாலிவுட் நடிகர் மேத்யூ மேக்னாக்கி எழுதிய க்ரீன் லைட்ஸ் என்னும் புத்தகத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார். ‘வாழ்க்கைக்கான காதல் கடிதம். இந்த புத்தகம்தான் எனக்கான கீரீன் சிக்னல் (A love letter to life .. thank you @officiallymcconaughey for sharing your journey .. this read is a green light for me .. respect sir)’ எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் நாக சைதன்யா உடனான விவாகரத்தும், அது குறித்து சமூக வலைதளங்களில் உலாவி வந்த வதந்திகளும் சமந்தாவை மிகவும் பாதித்து விட தனது நெருங்கிய தோழியுடன் கேதார்நாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார் சமந்தா. அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். என்னினும் சமந்தா பற்றிய வதந்திகள் ஓய்ந்த பாடில்லை. இதனால் கடுப்பான சமந்தா வதந்திகள் பரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு தொடர்தார். முன்னதாக கணவர் பிரிவில் இருந்து வெளியேற சிறிது காலம் தேவைப்படும் எனக் கூறிய சமந்தா, தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.
தற்போது சென்னையில் வசித்து வரும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் இரண்டு போட்டோக்களை பகிர்ந்தார்.அதில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வெளியே மழை பெய்யும் ஒரு போட்டோவும், தனது செல்லப்பிராணிகளான ஹஷ் மற்றும் சாஷாவின் மற்றொரு புகைப்படமும் இருந்தது. இதில் நாய்கள் இருக்கும் புகைப்படத்தில், “நான் ஒரு நாள் இல்லை.. ஒரு நாள்... என்னோட முதல் குழந்தை சோகத்தில்” என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தா தனது செல்லப்பிராணிகள் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்றாலே அறிந்து கொள்ள முடியும்.