Naane Varuven| விஜய் படத்தால் தாமதமாகும் தனுஷ் படம்: ’நானே வருவேன்’ பெயரை மாற்ற முடிவு!
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படம் குறிந்த எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
கோலிவுட்டின் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் . அதே போல தவிர்க முடியாத இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர்தான் தனுஷ். அதன் பிறகு இவர்கள் இருவரின் கூட்டணியில் காதல் கொண்டேன் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்றளவும் இந்த படத்தை பலர் கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு புதுப்பேட்டை படம் வெளியானது. கடந்த 2011 ஆம் ஆண்டு ‘மயக்கம் என்ன ‘ என்ற திரைப்படத்திலும் செல்வராகவன் இயக்கத்தில் நடித்திருந்தார் தனுஷ். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது. இவர்கள் காம்போவில் உருவாகும் படத்திற்கு ‘நானே வருவேன்’ என பெயரிட்டுள்ளனர். தனுஷ் புகைப்படத்துடன் கூடிய ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கியது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படம் குறிந்த எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் படம் துவங்க தாமதமானதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. செவராகவன் சாணிகாயிதம் படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி நாம் அறிந்ததே . அந்த படத்தில் தனது போஷன்களை முடித்த கையோடு , ‘நானே வருவேன்’ படத்தின் டைரக்ஷன் பணிகளை மேற்க்கொள்வார் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பீஸ்ட் படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வரவே அதையும் தவிர்க்க முடியாமால் , படத்தில் நடிக்க கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டர். தற்போது பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடித்து வருவதனாலேயே ’ நானே வருவேன்’ படம் திட்டமிட்டமிட்டபடி தொடங்கவில்லையாம். பீஸ்ட படத்தில் தனது காட்சிகளை விரைந்து முடித்துக்கொடுத்து வருகிற நவம்பர் மாததில் தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ படத்தை தொடங்க முடிவு செய்துள்ளாராம் செல்வராகவன்.
செல்வராகவனின் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகம் படத்திலும் தனுஷ் நடிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அதற்குள் தனுஷை வைத்து இயக்குனர் செல்வராகவன் நானே வருவேன் என்ற படத்தை இயக்க போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.சில காரணங்களால் படத்தின் தலைப்பை மாற்ற தயாரிப்பாளர் தாணு, செல்வராகவனிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலைப்பு மட்டுமின்றி கதைக்களத்திலும் பல மாற்றங்களுடன் ’ராயன்’ என்ற தலைப்பில் அந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.