மேலும் அறிய

Na.Muthukumar: சாம்பல் கரையும்.. வார்த்தை கரையுமா? கொண்டாடப்படும் கலைஞன் நா.முத்துக்குமார் பிறந்தநாள் இன்று!

மழைக்கால மாலையில் எம்.எப்.ரேடியோ, சோஷியல் மீடியாவில்  ஏதோ ஒரு வீடியோ எடிட் என கேட்கும் இடமெல்லாம் நாமு நின்று புன்னகைக்கிறார். ஜூலை 12 நாமுவின் பிறந்தநாள். 

இசை ரசிக்கும் யாரும், கவிதை ரசிக்கும் யாரும் நாமுத்துக்குமாரை நினைக்காமல் இருக்க முடியாது. இலையை அசைக்கும் காற்றுதால் ஒலியைக் கடத்துக்கிறது என்கிறது அறிவியல். அந்தக்காற்று அசையும் வரை ஒலி பரவும் வரை இசையும் நம்மிடம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. நிச்சயம் அதில் நாமு இருக்கிறார். தூர தேசத்தில் அரைகுறையாய் ஒலிக்கும் ஏதோ ஒரு பாடல் நாமுவுக்கு உரியதாய் இருக்கும், யாரோ ஒருவரின் காலர் ட்யூன், பொது இடத்தில் அழைப்புக்காக ஒலிக்கும் அறிமுகமில்லாத ஒருவரின் ரிங்டோன், மழைக்கால மாலையில் எம்.எப்.ரேடியோ, சோஷியல் மீடியாவில்  ஏதோ ஒரு வீடியோ எடிட் என கேட்கும் இடமெல்லாம் நாமு நின்று புன்னகைக்கிறார். ஜூலை 12 நாமுவின் பிறந்தநாள். 


Na.Muthukumar: சாம்பல் கரையும்.. வார்த்தை கரையுமா? கொண்டாடப்படும் கலைஞன் நா.முத்துக்குமார் பிறந்தநாள் இன்று!

நாமுத்துக்குமார் குறித்து சொன்ன பாலுமகேந்திரா, ‘சுவாசம்போல் கவிதை வருகிறது இவனிடம்’என்றார். ஆமாம், உண்மைதான் என்பதுபோல அழகான கவிதை வரிகளை எல்லாம் பாடல்களில் கொடுத்து ரசிக்க வைத்தவர் நாமு. 

''அடடா
தெய்வம் இங்கே வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே''

''வேரின்றி விதையின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே''

''அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி''

''பறவை பறந்தப் பிறகும் கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே''

''தொடு வானம்
போலவே கதை பேசிக்
கொண்டே வா காற்றோடு
போவோம் உரையாடல்
தீர்ந்தாலும் உன் மௌனங்கள்
போதும் ''


Na.Muthukumar: சாம்பல் கரையும்.. வார்த்தை கரையுமா? கொண்டாடப்படும் கலைஞன் நா.முத்துக்குமார் பிறந்தநாள் இன்று!

இப்படியாக பாட்டுக்குபாட்டு வரிகளை கோடிட்டுக்காட்ட முடியும். ‘வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்’ என வெயிலை தொடர்ந்து ரசித்து ஆமோதித்த ஒரு கவிஞன். ’மழை மட்டுமா அழகு.. சுடும் வெயில்கூடத்தான் அழகு’ என அழுத்திச் சொன்ன பாடலாசிரியர். ’ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு’ என தந்தைக்குள் இருக்கும் தாயை கண்முன்னே கொண்டு வந்தவர். 

காதல் களிப்பு, காதல் தோல்வி, நட்பு, அம்மா, அப்பா,  உறவுகள், மழை, வெயில் என நாமு தொடாத புள்ளியே இல்லை. தன் வார்த்தைகள் வழியே, காதலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கவும் செய்வார், காதல்  தோல்வியால் துவண்ட மனதுக்கு ஆறுதல் கூறவும் செய்வார். நீங்கள் எந்த மனநிலையில் தேடினாலும் உங்களுக்கான வார்த்தைகளை பாடல்களாக வைத்திருப்பவர் நாமு. தமிழ்ச் சினிமாத்துறையில் புயலென புகுந்து வீசி இன்று அமைதியாய் கடந்து சென்ற நாமுவின் பிறந்ததினம் இன்று. உடலால் மறைந்தாலும் எங்கோ ஒரு மூலையில், ஒரு தூர ஒலியாக நாமுவின் வரி பாடலாக கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இசை இருக்கும் வரை, மொழி இருக்கும் வரை நாமுவுக்கு இறப்பில்லை. 

நாமுவுக்கு என்றுமே அவர் வார்த்தைகள் சரியாய் பொருந்தும். அது,

'சாம்பல் கரையும்.. வார்த்தை கரையுமா?'

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget