மேலும் அறிய

N. T. Rama Rao | 70 வயதில் மறுமணம்.. 3 முறை முதலமைச்சர் :தெலுங்கு தேசத்தில் கோலோச்சிய என்.டி.ஆர் நினைவு தினம்!

யாருமே எதிர்பாராத தருணத்தில்... என்டிஆர் வாழ்வில் ஒரு கட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் எப்படி ஒரு சகாப்தமோ அப்படித்தான் தெலுங்கு திரைப்பட உலகில் என்.டி.ஆரும் . என்.டி.ராமாராவ் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். 1923-ஆம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் நிம்மகுரு என்ற ஊரில் பிறந்தார்.  சிறு வயதில் இருந்தே சினிமா ஆர்வம் கொண்டவராக இருந்த என்.டி.ராமாராவ் , எம்.ஜி.ஆரை போலத்தான் 1947-ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார். அதன் பிறகு பை-லிங்குவல் படமாக வெளியான பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். அதன் பிறகு தெலுங்கு சினிமா என்.டி.ஆரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. 1952-ல் 'கல்யாணம் பண்ணிப்பார்'  என்னும் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தின் வெற்றிக்கும் பிறகு என்.டி.ஆர் அசைக்க முடியாத நடிகராக உருவானார்.

N. T. Rama Rao | 70 வயதில் மறுமணம்.. 3 முறை முதலமைச்சர் :தெலுங்கு தேசத்தில் கோலோச்சிய என்.டி.ஆர் நினைவு தினம்!

கர்ணன் படத்தில் என்.டி.ஆர் கிருஷ்ணராக வரும் காட்சிகளை இன்றளவும் மெய்சிலிர்த்து பார்த்துக்கொண்டிருப்போம் நம்மில் பலர். ஆந்திர மக்கள் இவரை கடவுளாகவே கொண்டாடினர். இன்றளவும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கு திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்தமைக்காக 1968-ல் பத்மஸ்ரீ விருது என்.டி,ஆருக்கு வழங்கப்பட்டது.தமிழில் மாயா பஜார், லவகுசா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

N. T. Rama Rao | 70 வயதில் மறுமணம்.. 3 முறை முதலமைச்சர் :தெலுங்கு தேசத்தில் கோலோச்சிய என்.டி.ஆர் நினைவு தினம்!

நந்தமுரி டரகா ராமாராவ் எனும் என்.டி.ஆர் அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் 1980களில், என்.டி.ராமா ராவ் அவர்கள் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். தற்போது சந்திர பாபு நாயுடு தலைவராக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியை 1982 ஆம் ஆண்டு நிறுவியவர் என்.டி.ஆர்தான். 1983 – 1994 காலக்கட்டத்தில் என்.டி.ஆர் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். இவர் முதல்வராக இருந்த காலக்கட்டத்தின் சினிமா துறைக்கு ஆற்றிய பங்கு அதிகம் . கிராமப்புற பகுதிகளில் திரையரங்குகள் அமைய காரணம் என்.டி.ஆர்தான் . தனது கட்சியை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல ‘சைதன்யா ரதம்’ என்னும் பயணத்தை என்.டி.ஆர் மேற்க்கொண்டார். 

N. T. Rama Rao | 70 வயதில் மறுமணம்.. 3 முறை முதலமைச்சர் :தெலுங்கு தேசத்தில் கோலோச்சிய என்.டி.ஆர் நினைவு தினம்!
தனது 70 வது வயதில்   யாருமே எதிர்பாராத தருணத்தில்... என்டிஆர் வாழ்வில் ஒரு கட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. 1993 ஆம் ஆண்டு லக்ஷ்மி சிவபார்வதி என்னும் பேராசிரியர் ஒருவரை மறுமணம் செய்துக்கொண்டார். 70 வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருந்த என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்பி , அவரிடம் வந்தவர்தான் லஷ்மி. சிறு வயது முதலே என்.டி.ஆரி ரசிகையான அவர் , பேட்டி எடுக்க சென்ற இடத்தில் காதலில் விழுந்தார். ஆனால் என்.டி.ஆர் மீண்டும் முதல்வராக வேண்டுமானால் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என ஜாதகர் ஒருவர் கணிப்பின் படி திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. சொன்னபடியே  1994 ஆம் ஆண்டு முதல்வரானார்.1995 ஆம் ஆண்டு கட்சியில் நடந்த உள்பூசல் காரணமாக தெலுங்கு தேசம் கட்சி உடைந்தது. என்.டி.ஆரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து சந்திரபாபு நாயுடு ஓட்டெடுப்பு நடத்தி முதலமைச்சரானார். 

N. T. Rama Rao | 70 வயதில் மறுமணம்.. 3 முறை முதலமைச்சர் :தெலுங்கு தேசத்தில் கோலோச்சிய என்.டி.ஆர் நினைவு தினம்!

என்.டி.ஆர் திரைக்கு வரும் முன்னரே  திருமணமனமானவர் . 1942ம் ஆண்டு  பசவ தாரகம்  என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் . இவர்  1985ம் ஆண்டு புற்றுநோய் காரணத்தால் மரணம் அடைந்தார். இவரது  நினைவாக  பசவதாரகம் இந்தோ-அமெரிக்கா புற்றுநோய் மருத்துவமனையை ஐதராபாத்தில் 1986ல் திறந்தார் என்டிஆர். மனைவியின் பிரிவிற்கு பிறகு தனது 11 மகன், மகள்கள் மற்றும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட பேரக்குழந்தைகளுடன் என்டிஆர் வாழ்ந்து வந்தார். பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில்  காலமானார் . அவருக்கு அப்போது வயது 72.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!
ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி சேமிப்பு
Sunita Williams: தொடரும் சிக்கல்,  சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Sunita Williams: தொடரும் சிக்கல், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Australia Student Visa: இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
Crime: கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
Embed widget