மேலும் அறிய

HBD Santhosh Narayanan: ”இசையின் தனித்துவம்” - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிறந்தநாள் இன்று!

சுதந்திரமான இசையை விரும்பும் சந்தோஷ் நாராயணன், எந்த ஹீரோ என்றெல்லாம் பார்ப்பதில்லை. தன்னை சுதந்திரமாக செயல்பட விட்டால் சிறப்பான இசையை தருவேன் என சொல்லி விடுவாராம்.

தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

சந்தோஷ் நாராயணனுக்கு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தான் சொந்த ஊர். பொறியியல் பட்டதாரியான அவருக்கு சிறு வயதில் இருந்தே  இசையின் மீது அதீத ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக இசைக்கான பல தளங்களில் உதவியாளராக பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்குநாக அறிமுகமான அட்டகத்தி படம் வெளியானது. இந்த படத்தில் தாஜ் இசையமைப்பாளராக எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் இடம்பெற்ற “ஆடிப்போனா ஆவணி”, “ஆசை ஒரு புல்வெளி”, "நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமா ?" என விதவிதமான பாடல்களை கொடுத்து கவனிக்க வைத்தார். 

அன்றைய ஆண்டின் சிறந்த பாடல்களாக இடம்பெற்ற நிலையில் சந்தோஷ் நாராயணும் கொண்டாடப்பட்டார். சூழலுக்கு ஏற்ற இசையை சந்தோஷ் கில்லாடி தான். அதேபோல் பிஜிஎம் மியூசிக்கிலும் உருகவும், உணர்ச்சி வசப்படவும் வைத்து விடுவார். பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், 36 வயதினிலே, இறுதிச்சுற்று, காதலும் கடந்து போகும், மனிதன், இறைவி, கபாலி, காலா, கொடி, காஷ்மோரா, பைரவா, மேயாத மான், பரியேறும் பெருமாள், கர்ணன், ஏ1, ஜிப்ஸி, பாரிஸ் ஜெயராஜ், கர்ணன், சார்பட்டா பரம்பரை, மஹான், கடைசி விவசாயி, சித்தா என ஏகப்பட்ட தமிழ் படங்களுக்கு கடந்த 12 ஆண்டுகளில் இசையமைத்துள்ளார். 

சுதந்திரமான இசையை விரும்பும் சந்தோஷ் நாராயணன், எந்த ஹீரோ என்றெல்லாம் பார்ப்பதில்லை. தன்னை சுதந்திரமாக செயல்பட விட்டால் சிறப்பான இசையை தருவேன் என சொல்லி விடுவாராம். துள்ளலான இசை தொடங்கி சோகத்தை பிழிய வைக்கும் இசை வரை எல்லாம் நம்மவருக்கு கைவந்த கலையாகும். கடந்த சென்னை பெருவெள்ளத்தின்போது தன்னால் இயன்ற உதவிகளை செய்து பாராட்டைப் பெற்றார். 

திறமை இருந்தால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமரலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். ச.நா என அன்போடு அழைக்கப்படும் சந்தோஷ் நாராயணன் சினிமா துறையில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் மென்மேலும் உயர வாழ்த்துகள்..!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்
‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
நவம்பர் 20 வெளியாகும் 4 படங்கள்...சீன், ராமாயணா படத்தால் திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல்?
நவம்பர் 20 வெளியாகும் 4 படங்கள்...சீன், ராமாயணா படத்தால் திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh:”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
TN Govt: 17 கொலைகள் உண்மைதான்..! ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட் - எதிர்க்கட்சிகளுக்கு விஜய் அரசு பதிலடி
17 கொலைகள் உண்மைதான்..! ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட் - எதிர்க்கட்சிகளுக்கு விஜய் அரசு பதிலடி
TN Weather News: தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று மழைக்கு வாய்ப்பு? சென்னை? மீனவர்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று மழைக்கு வாய்ப்பு? சென்னை? மீனவர்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?

Embed widget