மேலும் அறிய

G V Prakash : 19 ஆண்டுகளில் 100 படங்கள்...ஒருத்தரையும் விடாமல் நன்றி சொன்ன ஜி.வி பிரகாஷ்

தமிழ் சினிமாவில் கடந்த 19 ஆண்டுகளாக மக்களை கவர்ந்த ஜி.வி பிரகாஷ் தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள் , தயாரிப்பாளர் , ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ஜி.வி பிரகாஷ் குமார்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநாநூறு திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 100 ஆவது படமாகும். தமிழ் சினிமாவில் கடந்த 19 ஆண்டுகளாக மக்களை கவர்ந்த ஜி.வி பிரகாஷ் தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள் , தயாரிப்பாளர் , ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ஜி.வி வெளியிட்ட அறிக்கை 

ஜீவி100 எனும் சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. 'வெயில்' படத்தின் மூலம் தமிழ் திரையிசையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.
ரஜினிகாந்த் - அஜித் - விஜய் - விக்ரம் - சூர்யா - தனுஷ்- சிலம்பரசன் டி. ஆர்.- பிரபாஸ் - ரவி தேஜா - சித்தார்த் - கார்த்தி - ஆர்யா- விஷால் - ஜெயம் ரவி- சிவ கார்த்திகேயன் - துல்கர் சல்மான் - ராம் பொத்தனேனி - அதர்வா- ராகவா லாரன்ஸ் - அருண் விஜய் - பரத் - பசுபதி- என திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றேன். இதற்காக இப்படத்தினை இயக்கிய இயக்குநர்கள் வசந்த பாலன், ஏ.எல். விஜய், புஷ்கர்- காயத்ரி, பி. வாசு, வெற்றி மாறன், செல்வராகவன், தனுஷ் - சுதா கொங்காரா - பாரதிராஜா, அட்லீ, ஹரி, சிம்புதேவன், பாலா, சேரன், சமுத்திரக்கனி, முத்தையா, ஆதிக் ரவிச்சந்திரன், மணிகண்டன், சாம் ஆண்டன், பா. ரஞ்சித், எம். ராஜேஷ், மித்ரன் ஆர் ஜவஹர், தங்கர் பச்சன், ஏ. கருணாகரன், வெங்கி அட்லூரி, அருண் மாதேஸ்வரன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்கள் K. பாலசந்தர், கலைப்புலி எஸ். தாணு, ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட கல்பாத்தி எஸ் அகோரம், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், சுரேஷ் பாலாஜி, பிரகாஷ்ராஜ், ஆஸ்கார் வி. ரவிச்சந்திரன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, அருண் பாண்டியன், கருணா மூர்த்தி, புஷ்பா கந்தசாமி, ஆர். ரவீந்திரன், ஏ. ஆர். முருகதாஸ், எஸ். ஆர். பிரபு, டி. சிவா, எஸ். மைக்கேல் ராயப்பன், டி. ஜி. தியாகராஜன்- பி வி எஸ் என் பிரசாத், சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நாக வம்சி, மைத்திரி மூவி மேக்கர்ஸ் ரவி - நவீன், அபிஷேக் அகர்வால், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன், ஆர். சந்திர பிரகாஷ் ஜெயின், ஆர். சரத்குமார்- திருமதி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்களுக்கும், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இயக்குநர் & நடிகர் அனுராக் காஷ்யப் மற்றும் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், இசை கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் கமல்ஹாசன் சார் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில் அவரது தயாரிப்பில் உருவான 'அமரன்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் பாடல்களையும், இசையையும் கேட்டு கமல்ஹாசன் சார் பாராட்டியது எனக்கு மேலும் உற்சாகமூட்டியது.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் பல பாடல்களை பாடி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், சக இசை கலைஞர்களுக்கும், இந்தப் பாடல்களை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம் 2024 ஆம் ஆண்டில் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைக்கும் நல்ல வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். 'சூரரைப் போற்று' எனும் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதினை வெல்வதற்கு காரணமாக இருந்த இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நூறாவது திரைப்படம் என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறேன். 19 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான இந்த பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள்,இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள், தற்போது வரை தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் அளித்து வரும் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும்.. நடிப்பதிலும். பின்னணி பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்,
ஜீ. வி. பிரகாஷ் குமார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Embed widget