ஜல்லிகட்டு போராட்டத்தில் பேசிய ஜிவி பிரகாஷா இது ?மோடியை இப்படி புகழ்ந்திருக்காரே...
மோடியைப் பற்றிய ஏழைத்தாயின் மகன் பாடலுக்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்று படமாவது அறிவிக்கப்பட்டது. மலையாள நடிகர் உன்னி முகுந்த இந்த படத்தில் நரேந்திர மோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் மோடியைப் பற்றிய சிறப்பு பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. 'ஏழைத் தாயின் மகன்' என்கிற இந்த பாடலை ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த பாட்டிற்கு இசையமைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை ஜிவி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
மோடியை புகழ்ந்த ஜிவி பிரகாஷ்
"இசையமைப்பாளராகவும் , பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும் , 140 கோடி மக்களின் பாதுகாவலர் , எனது பிரதமர் அவர்களின் பிறந்த தினத்திற்கு மக்களின் சார்பாக இந்த அன்பு பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைகிறேன்.நீண்ட நெடிய ஆயுளோடு மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டிக்கொள்கிரேன் ." என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டில் பேசிய ஜிவி பிரகாஷா இது?
ஜல்லிகட்டு விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தபோது பாஜகவை விமர்சித்து ஜி.வி பிரகாஷ் வெளியிட்டிருந்தார். இதுதவிர்த்து பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் மத்திய அரசுக்கு எதிரான தனது கருத்தியலை முன்வைத்து வந்தார். அப்படி பேசிய பிரகாஷா இப்படி மோடியை புகழ்ந்து பேசியிருக்கிறார் என பலர் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 140 கோடி மக்களின் பாதுகாவலன் என்றெல்லாம் மோடியை பாராட்டி பேசிய அவரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். தேசிய. அமரன் விருதுக்காக அவர் இப்படி வெளிப்படையாக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாகவும் சிலர் கூறியுள்ளார்கள்.
இசையமைப்பாளராகவும் , பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும் ,
— G.V.Prakash Kumar (@gvprakash) September 17, 2025
140 கோடி மக்களின் பாதுகாவலர் , எனது பிரதமர் @narendramodi அவர்களின் பிறந்த தினத்திற்கு மக்களின் சார்பாக இந்த அன்பு பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைகிறேன்.நீண்ட நெடிய ஆயுளோடு மக்கள் பணியாற்றிட இறைவனை… pic.twitter.com/xiOiYCZ1BS
ஜிவி பிரகாஷின் இந்த பதிவுக்கு திரைத்துறையினர் சிலரும் தனங்கள் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்கள். தமிழ் படத்தின் இயக்குநர் ஜிவி பிரகாஷை நக்கலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.





















