மேலும் அறிய

சாதித்தவர்களே அடக்கமாக இருக்கும்போது, மீராமிதுனுக்கு ஏன் இவ்வளவு ஆணவம்? - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

பட்டியலின மக்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட நடிகை மீராமிதுனுக்கு பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கண்டனங்களுக்கு ஆளாவதை வாடிக்கையாக கொண்டவர் நடிகை மீராமிதுன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டியலின மக்களை பற்றி அவதூறாக பேசி காணொலி ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து, அவர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மீராமிதுனுக்கு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“ என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு? உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாக கேட்பார்கள். ஆனால், மீராமிதுன் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல. வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம். சாதிப்பெயரை சொல்லி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும்போது, இவர் ஏன் இவ்வளவு ஆணவமாக பேசுகிறார்?

சாதித்தவர்களே அடக்கமாக இருக்கும்போது, மீராமிதுனுக்கு ஏன் இவ்வளவு ஆணவம்? - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது? பெருமதிப்பிற்குரிய என் தெய்வம் ‘ கலைஞானி’ கமல்ஹாசன் தன்னை ஒரு படத்தில் இருந்து ஒதுக்கி தள்ளவிட்டார் என்று இவர் கூறியிருப்பதை கேட்டு அழுவதா? சிரிப்பதா? ஈரக்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? என்ன மூடத்தனமான பேச்சு இது? தளபதி விஜய், தம்பி சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானி அவர்களா?

குறிப்பிட்ட சாதியினரை திரை உலகை விட்டு துரத்த வேண்டும் என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது. இவரது பேச்சு மனதை புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல, மடத்தனம்.  அகங்காரத்தின் உச்சம். மற்றவர்கள் மனதை புண்படுத்தும் விளம்பரம் தேடுவது கயமைத்தனம். இத்தகைய பேட்டிகளை யூ டியூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்துவிடலாம். மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரை கண்டிக்கிறேன். இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.“

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சாதித்தவர்களே அடக்கமாக இருக்கும்போது, மீராமிதுனுக்கு ஏன் இவ்வளவு ஆணவம்? - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

தொலைக்காட்சிகளில் நடைபெற்று வந்த போட்டிகள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களில் சிறு, சிறு தொடர்களில் நடித்து வந்த மீராமிதுன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற தொடரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து தமிழ்நாட்டில் பிரபலம் ஆனார். தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, விஜய் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி மிகவும் அவதூறாக பேசினார், இதனால், கொந்தளிப்படைந்த ரசிகர்கள் மீராமிதுனை சமூக வலைதளங்களில் மிகவும் கடுமையாக விமர்சித்தனர். மீராமிதுனின் இந்த தொடர் அவதூறு பேச்சால் அவரை கைது செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget