நடிப்பில் பெயர் வாங்க விரும்பும் சாய்பல்லவி
நான் எனது நடிப்பில் திறமையை காண்பிக்க விரும்புகிறேன் என நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவியின் நடிப்பை தாண்டி அவரின் நடனத்திற்கு அதிக ரசிகர்கள் உண்டு . தனது நடனத்தின் பயணத்தை உங்களில் யாரு பிரபுதேவாவில் ஆரம்பித்தார் .
அவர் நடனத்தில் அனைவரின் மனதை கவர்ந்தார் . சாய் பல்லவியின் முதல் வைரல் ஹிட் பாடலாக அமைந்த பாடல் "rowdy baby " 100 மில்லியன் வியூஸ்களைப் பெற்றது. சாய் பல்லவியின் நடனம் அனைத்து குழைந்தைகளால் ரசிக்கப்பட்டது.
இதையடுத்து தற்பொழுது வெளியான "சாரங்க தரியா " பாடல் வெளியாகி சில நாட்களிலே 50 மில்லியன் வியூஸ்களை பெற்று உள்ளது. அதில் சாய்பல்லவியின் நடனம் இன்னும் மெருகேறியுள்ளது . இதைப் பற்றி சாய் பல்லவி கூறிய பொழுது " நான் ஒரு நடக்கலைஞராக பெயர் வாங்குவதை நான் விரும்பவில்லை .
நடனம் அணைத்து கலைஞர்களின் முயற்சிகளால் உருவானது ,நல்ல பாடல் அமையவேண்டும் , நல்ல நடன அமைப்பாளர் அமைய வேண்டும் இது அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பாடல் வெளியாகி ஹிட் ஆகிறது . நான் எனது நடிப்பில் எனது திறமையை காண்பிக்க விரும்புகிறேன் .அது மற்றும் தான் என்னுடைய தனித்துவத்தை காண்பிக்கும் நான் ஒரு நல்ல நடிகை என்று விரைவில் நிருபிப்பேன் " என்று கூறியுள்ளார் .