Money Heist : நெட்ஃப்ளிக்சில் வெளியானது மணிஹைஸ்ட் கொரியன் வெர்சன்..! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா..?
புகழ்பெற்ற மணிஹைஸ்ட் சீரிசின் கொரியன் வெர்சன் நெட்ஃப்ளிக்சில் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017ம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியானது மணிஹைஸ்ட் வெப்சீரிஸ். வங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த வெப்சீரிஸ் நெட்ஃப்ளிக்சிலும் வெளியானது. கொரோனா கால ஊரடங்கின்போது மணிஹைஸ்ட் சீரிஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்த சீரிசில் இடம்பெற்ற ப்ரொபஷர் கதாபாத்திரத்திற்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். மொத்தம் 5 சீசன்களை கொண்ட மணிஹைஸ்ட் உலகெங்கிலும் பல மொழிகளிலும் ரிலீசாகியது.
இந்த நிலையில், தற்போது மணி ஹைஸ்ட் சீரிசின் அடுத்த தொடர்ச்சியாக கொரியன் வெர்சன் உருவாகியுள்ளது. நெட்ஃப்ளிக்சில் நேற்று முன்தினம் இந்த புதிய மணிஹைஸ்ட் வெளியாகியுள்ளது. மணிஹைஸ்ட் “கொரியா ஜாய்ண்ட் எகானாமிக் ஏரியா” என்று பெயரிடப்பட்ட இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரிய திரைப்படங்களுக்கு உலகளாவில் மிகுந்த எதிர்பார்ப்பு எப்போதும் இருப்பதால், மணிஹைஸ்ட் கொரியன் வெர்சனான இந்த தொடருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தொடரை கிம் ஹாங் சன் இயக்கியுள்ளார். இந்த தொடரில் பிரபலமான ப்ரொபஷர் கதாபாத்திரத்தில் யூ ஜூ டே என்ற நடிகர் நடித்துள்ளார்.
பெர்லின் கதாபாத்திரத்தில் பார்க் ஹே சூ நடித்துள்ளார். மற்றொரு பிரபலமான டோக்கியோ கதாபாத்திரத்தில் ஜியோன் ஜாங்க் சியோ நடித்துள்ளார். அந்த மணிஹைஸ்டைப் போலவே கொள்ளையை அடிப்படையாக கொண்ட இந்த தொடர் 4 ட்ரில்லியன் பணத்தை எப்படி வெற்றிகரமாக கொள்ளையடிக்கின்றனர் என்பது போல எடுக்கப்பட்டுள்ளது.
மணிஹைஸ்ட் சீரிசில் பிரபலமான மாஸ்கோ, டென்வர், நைரோபி, ரியோ, ஹெல்சிங்கி, ஓஸ்லோ கதாபாத்திரங்களிலும் இந்த சீரிசில் மாற்று நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த சீரிசுக்கான திரைக்கதையை ரியூ யோங் ஜே, கிம்குவான் சே, சோ சங்ஜூன் ஆகியோர் எழுதியுள்ளனர். ஐ.எம்.டி.பி.யில் இந்த சீரிசுக்கு 10க்கு 5.1 தரமதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது இந்தியில் மட்டும் இந்த புதிய சீசன் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: `காதல் வளர்த்தேன் to காதல் வராதா’ - `லூசுப் பெண்ணே’ பாடல் உருவான விதம் பற்றி மனம் திறந்த சிம்பு!
மேலும் படிக்க:`மும்பை அண்டர்வேர்ல்ட் தாதாக்களால் வாய்ப்புகளை இழந்தேன்!’ - பாலிவுட் ரகசியம் சொல்லும் `காதலர் தினம்’ சோனாலி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்