தேர்தலில் உங்களை வென்றதை எண்ணி மகிழ்கிறேன்... விக்ரம் படம் பார்த்து கமலை சீண்டிய வானதி
விக்ரம் படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்டாலும் படம் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்த்த கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது.
லோகேஷ் கனகாரஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் பாஸில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் விக்ரம். இந்த படம் கடந்த ஜூன் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் வசூலில் உலகளவில் ரூ.400 கோடியை எட்டியுள்ளதால் கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Feeling happy to have won you in Assembly Elections.
— Vanathi Srinivasan (@VanathiBJP) July 4, 2022
Watched #Vikram! Keep entertaining us Mr.@ikamalhaasan!
தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன்.#விக்ரம் திரைப்படம் பார்த்தேன்.
உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள். pic.twitter.com/lr7Oi0WI19
இதனிடையே விக்ரம் படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்டாலும் படம் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள். தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த பலரும் வானதி மறைமுகமாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தன்னிடம் கமல் தோற்றதை குறிப்பிட்டு கலைப்பணி மூலம் மக்களை மகிழ்வியுங்கள் என சீண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்