Dhanush | கிங் - காங்கை வளர்க்கும் தனுஷ் - இண்டர்நெட்டில் ஹிட்டடிக்கும் க்யூட் புகைப்படம்..!
தென்னிந்திய சினிமாவிலேயே ட்விட்டர் பக்கத்தில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட ஒரே நடிகர் தனுஷ்தான்.
இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவும் கொண்டாடும் நடிகராக தன்னை செதுக்கி கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இயக்குநர்களின் சாய்ஸ் தனுஷாகத்தான் இருக்கிறது. காரணம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதோடு ஒன்றி விடுகிறார். தென்னிந்திய சினிமாவிலேயே ட்விட்டர் பக்கத்தில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட ஒரே நடிகர் தனுஷ்தான். சமூக வலைதளங்களில் அவ்வப்போது தலைக்காட்டும் தனுஷ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது தனுஷ் வீட்டிற்கு இரண்டு HUSKY இன நாய்க்குட்டிகளை வாங்கியுள்ளார். அந்த நாய்க்குட்டிகளுக்கு கிங் மற்றும் காங் என பெயர் வைத்துள்ளார். அந்த நாய்க்குட்டிகளை அணைத்தபடி தனுஷ் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கேப்ஷனாக “எனது குடும்பத்திற்கு வரவேற்கிறேன் கிங் மற்றும் காங். உங்களுடனான சாகச பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என பதிவிட்டு #unconditionallove என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு கீழே நடிகர் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், தனுஷின் அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
தனுஷின் கால் ஷீட்டை எப்படியாவது பெற வேண்டும் என கோலிவுட் இயக்குநர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர். தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் தனது காட்சிகளை நடித்து கொடுத்துள்ளார். தற்போது மித்ரன் கே.ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் என மூன்று கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இதில் ராஷி கண்ணாதான் தனுஷுக்கு ஜோடி என கூறப்படுகிறது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதில் தனுஷ் மற்றும் ராஷி கண்ணா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் ஒரு காட்சிக்காக தயாராகிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை யாரோ ஒருவர் எடுத்து இணையத்தில் ஷேர் செய்ய அது வைரலானது. அந்த புகைப்படத்தை கண்ட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
படங்களில் பிஸியாக நடித்தாலும் , நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனும் நேரம் செலவிடவும் செய்கிறாராம் தனுஷ். நேற்று யுவன்ஷங்கர் ராஜா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துக்கொண்டார் தனுஷ். அங்கு யுவன் மற்றும் பாடகி தீயுடன் இணைந்து ‘ரவுடி பேபி’ பாடலை உற்சாகத்துடன் பாடிய வீடியோ இணையத்தில் கசிந்தது. அதனை தனுஷ் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.