மேலும் அறிய

Mansoor Alikhan: "த்ரிஷாவை மதிக்கிறேன்.. தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது" காவல்நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான் பேட்டி!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மன்சூர் அலிகான், அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

குவிந்த கண்டனங்கள்:

பின்பு அமைச்சர் ரோஜா, கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.இதனையடுத்து மன்சூர் அலிகான் அளித்த விளக்கத்தில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார். 

இதனிடையே  இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. இதனையடுத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் தான் திரிஷாவை பாராடிப் பேசினதாக மன்சூர் அலிகான் தெரிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், உள்ளிட்ட  திரைத்துறை சம்பந்தமான சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

த்ரிஷாவை மதிக்கிறேன்:

இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆஜராக அவகாசம் கேட்டு மன்சூர் அலிகான் காவல்துறைக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், அவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி விளக்கம் அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று காவல் நிலையத்தில் தான் விளக்கம் அளித்ததாக தெரிவித்தார். த்ரிஷாவை நடிகையாக மதிப்பதாகவும், தனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்ததாக அவர் தெரிவித்தார்.  

மேலும் படிக்க

Suriya Injured: திடீரென விழுந்த கேமரா.. நடிகர் சூர்யாவுக்கு காயம்.. கங்குவா ஷூட்டிங்கில் விபத்து..!

Uttarakhand Tunnel rescue LIVE: "மீட்ட பிறகு தொழிலாளர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டம்"

TN Headlines: வலுவடைந்த பருவமழை; முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார் - முக்கிய செய்திகள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget