Mansoor Ali Khan: ”ரெட் ஜெயண்டின் 'சில்வெஸ்டர் ஸ்டாலோன்" : கமலை கலாய்த்த மன்சூர் அலிகான்!
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது.
![Mansoor Ali Khan: ”ரெட் ஜெயண்டின் 'சில்வெஸ்டர் ஸ்டாலோன் Mansoor Ali Khan release statement takes dig at kamal hassan for rajyasabha seat in dmk Mansoor Ali Khan: ”ரெட் ஜெயண்டின் 'சில்வெஸ்டர் ஸ்டாலோன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/225803ab604e9cd38179ff36a93fdd301709986191739102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
“தமிழ் ஜனநாயக புலிகள்”
நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முழு வீச்சில் களம் கண்டு வருகின்றன. யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், போட்டியிடாத நிலையில் ஆதரவு கொடுப்பார்கள் என ஏகப்பட்ட எதிர்ப்பு நிலவி வருகிறது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியானது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சில நாட்களுக்கு முன்பு “தமிழ் ஜனநாயக புலிகள்” என்ற கட்சியை தொடங்கினார். அதாவது ஏற்கனவே அவர் தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை நடத்தி வந்தார். இதன் பெயர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பல்லாவரத்தில் “தமிழ் ஜனநாயக புலிகள்” கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி, திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்கள் போட்டியிடப் போவதாகவும், பெரிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கட்சி சார்பில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில், கமலை கடுமையாக கலாய்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
”வேகமா தொகுதி குடுக்கப் பாருங்க”
அதில், "எங்களை பொறுத்தவரை பிழைப்பு, பொழப்பு, முக்கியமில்லை. பதவி தான் முக்கியம். பாராளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகார பதவி! அதை வைத்து தான் என் மண்ணின் எளிய மக்களின், வாழ்வாதார, ஜீவாதார, வேலைவாய்ப்பு, நதி நீர், குடிநீர், அரசியல் அதிகார அனைத்து உரிமையையும் வென்றெடுக்க முடியும் என்று, அண்ணா, பெரியார், அம்பேத்கர், காயிதே மில்லத் மேல் ஆணையிட்டு, அறிதியிற்று, உறுதியிற்றுச் சொல்கிறேன்.
ஐயா, எங்களுடன் கூட்டணி பேச உள்ள ஆஜானுபாகுவான்களே! ஐயா, பெரியவர் ஆழ்வார்பேட்டை ஆண்டவர், பிக்பாஸ் பிதாமகன், ரெட் ஜெயன்ட் சில்வர்ஸ்ட்டர் ஸ்டாலின் வழியில் பதவி, பாராளுமன்ற தொகுதி இல்லை என்பதுபோல் சொல்லி விடாதீர்கள்.
நாங்கள் ரொம்ப ரொம்ப பொல்லாதவர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள்...பெரும் ஆர்வத்திலும் அகோர அதிகாரப் பசியிலும் இந்திய ஜனநாயகப் புலிகள் உறுமிக்கொண்டு இருக்கிறது. இது கூண்டு புலியல்ல; வீரப்பன் காட்டு வேங்கைப்புலிகள். வேகமா தொகுதி குடுக்கப் பாருங்க.
மாவட்ட பொறுப்பாளர்கள் அடங்கு அடங்குனாலும் மறு, மறுண்ணு பொறுமிகிட்டு...இருக்காங்க பாத்துக்கங்க.. அப்புறம்... ரொம்ப வறுத்தப்படுவீங்க! ஆதலினால் சகல விதமான பேருக்கும், எனது உயிருக்கு உயிரான வாக்காள பெருங்குடி மக்களுக்கும் தெரிவிப்பதென்னவென்றால், மேல் படி விசயம்தான்.... நமக்கு கப்பு முக்கியம்....அப்பு!" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)