மேலும் அறிய
Advertisement
Trisha: ”என் வருங்கால கணவர் அஜித் போல இருக்க வேண்டும்..” - இணையத்தில் வைரலாகும் த்ரிஷாவின் ஆசை!
Trisha: அஜித் போல் கணவர் வேண்டும் என்று த்ரிஷா பேசிய பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
Trisha: தனக்கு அஜித் போல் கணவர் வேண்டும் என்று த்ரிஷா பேசிய பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
த்ரிஷா- மன்சூர் அலிகான் விவகாரம்:
லியோ படத்தில் த்ரிஷா நடித்த நிலையில், அவர் குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானது. அண்மையில் பேசிய மன்சூர் அலிகான், லியோ படத்தில் தனக்கு நெருக்கமான காட்சிகள் இடம்பெறவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். மன்சூர் அலிகானின் அநாகரீகமான பேச்சுக்கு த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்தத்துடன், அவருடன் நடிக்கமாட்டேன் என கூறியிருந்தார். த்ரிஷாவுக்கு ஆதரவாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானிற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனால், கடந்த இரண்டு நாட்களாக த்ரிஷா டிரெண்டாகி வரும் நிலையில் த்ரிஷாவின் பழைய வீடியோ ஒன்று வைரலாக்கப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகள் திரையில் நடித்து கொண்டிருக்கும் த்ரிஷா 40 வயதை எட்டியுள்ளார். இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக உள்ளாதால், ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அண்மையில் த்ரிஷா திருமணம் குறித்த வதந்தி பரவியதால் அதற்கு அவரே முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் வருங்கால கணவர் குறித்து அவர் பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அஜித் போல கணவர் வேண்டும்:
சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்க்காணலில் பேசிய த்ரிஷா, அஜித் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் ஜென்டில்மேன் என்றும் குறிப்பிட்டதுடன், அவர் ஒரு நல்ல கணவராகவும், தந்தையாகவும் இருப்பதாகவும் கூறினார். மேலும், அஜித் போல் ஒருவர் கணவராக வரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் த்ரிஷா நடித்து வரும் நிலையில், போல் கணவர் வேண்டுமென த்ரிஷா கூறியதை தற்போது ரசிகர்கள் டிரோல் செய்து வருகின்றனர்.
த்ரிஷா அஜித்துடன் இணைந்து ஜீ, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா, விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 96 படத்திற்கு பிறகு ரசிகர்களின் கவனத்தை மீண்டும் தன்பக்கம் திருப்பிய த்ரிஷா, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து பேரழகில் மனதை கொள்ளையடித்தார். லியோவில் குடும்பத்து பெண்ணாக நடித்து கியூட் என பேச வைத்தார். தொடர்ந்து விடாமுயற்சியில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: Kalaignar 100: "அமிதாப், ரஜினி, கமல்" கலைஞர் 100 விழா மேடைக்கு தயாராகும் இந்திய திரை பிரபலங்கள்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
ஆன்மிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion