Watch Video : எப்படி நந்தினியானாங்க? பளிச்சென சொன்ன மணிரத்னம்.. காலில் விழுந்த ஐஷ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் அணுகுமுறையும், பர்சனாலிட்டியும் நந்தினி கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும் என நான் நம்பினேன் - மணிரத்னம்
அமரர் கல்கியின் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் உருவாக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. சக்திவாய்ந்த மன்னர்களில் மிக முக்கியமான மன்னரான இராஜராஜ சோழன் பற்றின கதையாகும். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி உலகெங்கிலும் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்றது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா, சரத்குமார், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பார்த்திபன் மற்றும் பலர் என ஏராளமானோர் நடித்த இப்படத்துக்கு இசையமைத்திருந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். ஒவ்வொரு மாநிலமாக சென்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழு கலந்து கொண்டது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம், ஐஸ்வர்யா ராய் ஏன் நந்தினி கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்து பேசியிருந்தார். அவர் பேசுகையில் " ஐஸ்வர்யா ராய் மீது நான் மிகுந்த அன்பு வைத்துள்ளேன். என்னதான் அன்பு வைத்து இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவராக இருந்தால் மட்டுமே நான் அவரை அணுகியுள்ளேன். ஒவ்வொரு முறை நான் அணுகிய போதும் அவர் சம்மதம் தெரிவித்தார். அதனால் இது அவரது அதிர்ஷ்டத்தால் கிடைத்த வாய்ப்பு அல்ல. முழுக்க முழுக்க அவரின் திறமைதான் காரணம். அவரின் அணுகுமுறையும், பர்சனாலிட்டியும் இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும் என நான் நம்பியதால் மட்டுமே அவரை அணுகினேன்" என்றார் மணிரத்னம்.
#ManiRatnam : How much ever I love her ( #AishwaryaRaiBachchan ) I will ask her only if I think he is right for the role. And every time I asked her. Bcoz I believe she is absolutely right for the role.
— Groovy (@BibaswanM) April 25, 2023
So it's not luck. Or it's not a charm. pic.twitter.com/lD1XqrN48E
இயக்குனர் மணிரத்தினம் தன்னை பற்றி புகழ்ந்து பேசியதால் நெகிழ்ச்சி அடைந்து அவரின் கால்களை தொட்டு வணங்கினார் ஐஸ்வர்யா ராய். மேலும் இந்த கேள்வி கேட்டமைக்காக பத்திரிகையாளருக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது.