ரூ.2 ஆயிரத்தை தாண்டிய பொன்னியின் செல்வன் டிக்கெட் விலை... புக்கிங் விறுவிறு!
ஒரு நாள் முன்னதாகவே படம் வெளியாக இருக்கும் நிலையில், செப்டம்பர் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கே படம் திரையிடப்பட இருக்கிறது.
கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்தின் முதல்பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் வெளியாக இருக்கிறது.
இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதனைத்தொடர்ந்து 'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது.
இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
View this post on Instagram
இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர தமிழ் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
View this post on Instagram
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், அமெரிக்காவில் படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்டுள்ளது.
FDFS Ticket Booked for #PonniyinSelvan in IMAX, USA.
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 17, 2022
Ticket Price - $28.50
Sept 29 Thurs 6 pm EST ( Fri 3.30 am IST) pic.twitter.com/soOarPWdW7
ஒரு நாள் முன்னதாகவே படம் வெளியாக இருக்கும் நிலையில், செப்டம்பர் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கே படம் திரையிடப்பட இருக்கிறது. ரசிகர்களுக்கான அந்தக் காட்சிக்கான டிக்கெட் விலை 28.50 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2,271.15 காசுகள் ஆகும். இந்தியாவிலேயே முதன் முறையாக ஐமேக்ஸ் ஒலி அமைப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது