Mammootty: இலங்கை சென்ற மம்மூட்டி... ஓடோடி சென்று சந்தித்த கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா!
மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி. இவரை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா அவரை சந்திப்பதற்காக ஓடோடி வந்துள்ளார்!
மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி. ரசிகர்களால் செல்லமாக லாலேட்டன் என்று அழைக்கப்படுகிறார் இவர். தனது படத்தின் சூட்டிங்கிற்காக சமீபத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார் மம்மூட்டி. இவர் வந்துள்ளதை கேள்விப்பட்ட அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா அவரை சந்திப்பதற்காக ஓடோடி வந்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இலங்கை
கடந்த சில மாதங்களாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது அனைவரம் அறிந்த கதை. இதனால், அந்நாட்டின் மக்கள் அரசை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால், இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து மாலத்தீவு, சிங்கப்பூர் என வெவ்வேறு நாடுகளில் தங்கும் நிலை ஏற்பட்டது. தற்சமையம் அவர் தாய்லாந்தில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோத்தபய ராஜபக்சேவிற்கு பிறகு ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாட்டின் இக்கட்டான சூழலை சமாளிக்க அவசர நிலை பிரகடனம், எரிவாயு கட்டுப்பாடு என பல திட்டங்களை அமல் படுத்தி, பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதார நிலையை சீரானா நிலையில் வைக்கவும் அந்நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சனத் ஜெயசூர்யா
இப்படி கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், நிதி திரட்டுவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இலங்கையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, தற்போது அந்நாட்டின் சுற்றுலாத் துறைக்கு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமாயணப்பாதை:
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இலங்கை அரசு, நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராமாயணப்பாதை எனக்கூறப்படும் என்ற இடத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Also Read|Ak61 update : தீபாவளிக்கு ரீலிஸ் ஆகுமா Ak61? தாமதமாகும் படப்பிடிப்பு..!
“நீங்கள் உண்மையிலேய சூப்பர் ஸ்டார்..”
மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தனது படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு சென்றுள்ளார். அவரது வருகை குறித்து கேள்விப்பட்ட அந்நாட்டின் தற்போதைய சுற்றுலா துறை தூதர் சனத் ஜெயசூர்யா, அவரை சந்தித்து பேசியுள்ளார். நடிகர் மோகன்லாலை சந்தித்தது குறித்து அவர் ஒரு ட்விட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் மோகன்லால் குறித்து அவர் கூறியுள்ளதாவது, “உங்களை சந்தித்தில் மிகவும் மகிழ்ச்சியும் அடைகிறேன் சார். நீங்கள் உண்மையிலேயே ஒரு சூப்பர் ஸ்டார் தான். உங்களைப் போலவே இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களும் இலங்கையை சுற்றிப்பார்க்க ஆசைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
It was an honour to meet Senior Malayalam actor @mammukka . Sir you are a true super star. Thank you for coming to Sri Lanka. I would like to invite all Indian stars & friends to #VisitSriLanka to enjoy our country pic.twitter.com/7PHX2kakH8
— Sanath Jayasuriya (@Sanath07) August 16, 2022
மம்மூட்டி தற்போது நடித்து வரும் படத்தில் ஒரு இலங்கைக்குச் செல்லும் பத்திரிகையாளராக வருகிறார். இதற்காக தான் அங்கு படப்பிடிப்பிற்கும் சென்றுள்ளார்.