(Source: ECI/ABP News/ABP Majha)
Ak61 update : தீபாவளிக்கு ரீலிஸ் ஆகுமா Ak61? தாமதமாகும் படப்பிடிப்பு..!
அஜித்தின் திரைப்படங்கள் அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளியாக உள்ளது, அதனால் அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய டிரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேம புத்தகம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜித் சமீபத்தில் திரையுலகில் தனது 30வது ஆண்டை நிறைவு செய்தார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடையே அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கிய வலிமை படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய அவர் இன்று முதல் AK 61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியானது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், அஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் நிலையில் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து செம ஸ்மார்ட்டாக மாறினார்.
. #AK61 getting ready..🔥🥳 pic.twitter.com/fohXektjYJ
— HVinoth (@HvinothDir) June 15, 2022
கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூர் மனைவியும், மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாள் வந்ததால் அன்றைய தினம் AK 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் AK61 பற்றிய பல தகவல்கள் வெளியாகி உள்ளன. AK61 கதை வங்கியை கொள்ளையடித்து விட்டு ஒரு டனல் வழியாக தப்பி வருவது தான் கதை அந்த டலனுக்கான வேலை இன்னும் முடியாததால் வைசாக்கில் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை .
வைசாக்கில் இன்னும் 40 நாட்களுக்கான சூட்டிங் மீதம் உள்ளது அதன் பிறகு ஹைதராபாத்தில் 50 நாட்கள் ஷூட்டிங்கும்.
கடைசி கட்டமான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஆகையால் AK61 தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது சந்தேகம்தான் மற்றும் AK62 இயக்குனர் விக்னேஷ் சிவன் திரைப்பட படப்பிடிப்பை இந்த ஆண்டு கடைசியில் துவங்கும் என அறிவித்திருக்கிறார். அஜித்தின் திரைப்படங்கள் அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளியாக உள்ளது அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய டிரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்