மேலும் அறிய

Mamukkoya: அய்யோ.. கால்பந்து போட்டி நடுவராகச் சென்றபோது மாரடைப்பு...பிரபல மலையாள நடிகர் கவலைக்கிடம்

மின்னல் முரளி, மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிங்கம், குருதி உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் மலையாள மம்மூக்கோயா.

கால்பந்து போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த பிரபல மலையாள நடிகர் மம்மூக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

மின்னல் முரளி, மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிங்கம், குருதி உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் மலையாள மம்மூக்கோயா.

இவர் முன்னதாக கேரள மாநிலம், களிகவு மாவட்டத்தின் நடைபெற்ற கால்பந்து போட்டியின் விருந்தினராகக் கலந்துகொண்ட நிலையில், திடீரென அவர் பேச்சு மூச்சற்று மயங்கி விழுந்துள்ளார். 

தொடர்ந்து மைதானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, விரைந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. தற்போது மம்மூக்கோயா கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்

மலையாள சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான மம்மூக்கோயா. 1979ஆம் ஆண்டு மேடைக் கலைஞராக தன் பயணத்தைத் தொடங்கிய இவர், மலபார் பகுதி வட்டார வழக்கில் பேசி நடிப்பில் பிரசித்திபெற்றார். மேலும் தன் உடல்பாணியாலும் நகைச்சுவை செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்துள்ளார். 

இந்நிலையில், மம்மூக்கோயாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், எனினும் 72 மணி நேரத்துக்கு அவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் முன்னதாக பிரபல நடிகர் சரத்பாபு உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த  சரத்பாபுவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழி திரைப்படங்களில் வில்லன், ஹீரோ நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் சரத்பாபு.

1977ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரத்பாபு, ஒரு புறம் தேர்ந்தெடுத்த படங்களிலும் மற்றொருபுறம் ரஜினி, கமல் இருவருடனும் பல படங்களில் நடித்தும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றார். 

குறிப்பாக, தமிழில் 1992ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்திலும் 1995ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படத்திலும் நடித்து பிரபலமானவர்.  இவருக்கு தற்போது 71 வயதாகிறது. இறுதியாக சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் படத்தில் சமந்தா நடித்திருந்தார்.

கடந்த 20ஆம் தேதி ஹைதராபாத்தில் கச்சிபௌலி எனும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சரத் பாபுவின் உடல் உறுப்புகள் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget